மொந்தா புயல் வேகம் அதிகரிப்பு – புதிய எச்சரிக்கை!
மொந்தா புயல் குறித்து புதிய எச்சரிக்கை – கரையை எப்போது கடக்கும்?
வங்கக்கடலில் உருவான மொந்தா புயல் ஆந்திரா கடற்கரை நோக்கி நகர்கிறது என வானிலை மையம் தகவல்
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது புயல் அளவுக்கு வலுப்பெற்று “மொந்தா” எனப் பெயரிடப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட சமீபத்திய தகவலின் படி, இந்த மொந்தா புயல் மேற்கு-வடமேற்கு திசையில் மெல்ல நகர்ந்து, அடுத்த இரண்டு நாட்களில் தீவிரமாகும் வாய்ப்பு உள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவான இந்த புயல், தற்போது சென்னையிலிருந்து சுமார் 950 கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது. நாளையிலிருந்து இதன் தாக்கம் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் அதிகரிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், மொந்தா புயல் அக்டோபர் 28ஆம் திகதி மாலை அல்லது இரவு நேரத்தில் ஆந்திர மாநிலத்தின் காக்கிநாடா முதல் கலிங்கப்பட்டினம் இடையிலான கடற்கரைப் பகுதிகளை நோக்கி கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரையை கடக்கும் போது காற்று மணிக்கு 90 முதல் 110 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த புயல் காரணமாக ஆந்திரா, ஒடிஷா மற்றும் தென் கிழக்குத் தமிழ்நாடு பகுதிகளில் கனமழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது. மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் இருக்கவும், கடற்கரைப் பகுதிகளில் வசிப்பவர்கள் முன் எச்சரிக்கையுடன் இருக்கவும் வானிலை மையம் கேட்டுக்கொண்டுள்ளது.
மொந்தா புயல் இந்திய வங்கக்கடலில் உருவாகும் இந்த பருவத்தின் முதல் முக்கியமான புயலாகும் என்பதால், இது குறித்து மத்திய வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொண்டு வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|