‘இட்லி கடை’ படத்திற்காக தனுஷ் வாங்கிய சம்பளம் எவ்வளவு?
‘இட்லி கடை’ படத்திற்காக தனுஷ் பெற்ற சம்பளம் குறித்து தகவல் வெளியீடு
இன்று திரையரங்குகளில் வெளியாக தனுஷின் இட்லி கடை
தனுஷ் இயக்கத்தில் உருவான நான்காவது படமான ‘இட்லி கடை’ இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இப்படத்தில் ஹீரோவாக நடித்ததுடன், இயக்குநராகவும் தனுஷ் பணியாற்றியுள்ளார்.
நித்யா மேனன், சத்யராஜ், அருண் விஜய், ஷாலினி பாண்டே, பார்த்திபன், சமுத்திரக்கனி, ராஜ்கிரண் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படம் வெளியான நிலையில், நடிகர் தனுஷ் பெற்ற சம்பளம் குறித்து சினிமா வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, ‘இட்லி கடை’ படத்திற்காக தனுஷ் ரூ.40 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கியிருக்கலாம் என கூறப்படுகிறது.
ஆனால், இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.
இருப்பினும், தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக விளங்கி வரும் தனுஷின் நடிப்பு, இயக்கம், வசூல் திறன் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த சம்பள மதிப்பீடு வலுவாக பேசப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|