Home>சினிமா>‘இட்லி கடை’ முதல் நா...
சினிமா

‘இட்லி கடை’ முதல் நாள் வசூல் – ரூ.15 கோடி!

byKirthiga|about 1 month ago
‘இட்லி கடை’ முதல் நாள் வசூல் – ரூ.15 கோடி!

தனுஷ் இயக்கிய ‘இட்லி கடை’ படம் – முதல் நாளிலேயே ரூ.15 கோடி வசூல்

தனுஷின் ‘இட்லி கடை’ – முதல் நாள் வசூல் வெளியானது

பிரபல நடிகர்-இயக்குநர் தனுஷ் இயக்கத்தில் உருவான ‘இட்லி கடை’ படம், முதல் நாளிலேயே ரூ.15 கோடி வசூல் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

‘பவர் பாண்டி’, ‘ராயன்’, ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ ஆகிய படங்களுக்கு பிறகு தனுஷ் இயக்கி நடித்துள்ள சமீபத்திய திரைப்படம் ‘இட்லி கடை’. டான் பிக்சர்ஸ் மற்றும் வொண்டர்பால் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு இசையை ஜி.வி.பிரகாஷ் அமைத்துள்ளார்.

இந்த படத்தில் நித்யா மேனன், அருண் விஜய், ராஜ்கிரண், சத்யராஜ், சமுத்திரகனி, பார்த்திபன், ஷாலினி பாண்டே, இளவரசு உள்ளிட்ட பலரும் இணைந்து நடித்துள்ளனர். ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜை விடுமுறை தினங்களை முன்னிட்டு அக்டோபர் 1ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியானது.

ஃபேமிலி என்டர்டெயினராக உருவான இந்த படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், வசூலில் நல்ல தொடக்கத்தை பெற்றுள்ளது. ரூ.80 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம், இந்திய அளவில் முதல் நாளில் ரூ.13 கோடி வசூல் செய்ததாகவும், உலகளவில் மொத்தமாக ரூ.15 கோடி வசூல் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக தனுஷ் இயக்கி நடித்த ‘ராயன்’ படம் முதல் நாளில் ரூ.23 கோடியை, சமீபத்திய ‘குபேரா’ படம் ரூ.26 கோடியை வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது. அதனை ஒப்பிடுகையில் பெரிய அளவில் புரமோஷன் இல்லாமல் வெளியான ‘இட்லி கடை’ படத்தின் ரூ.15 கோடி வசூல், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், அடுத்தடுத்த விடுமுறை நாட்களில் இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் தனுஷ் நடித்த ‘தேரே இஷ்க் மே’ படம் முடிவடைந்துள்ளதுடன், மாரி செல்வராஜ் மற்றும் ‘லப்பர் பந்து’ இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கும் புதிய படங்களிலும் அவர் நடிக்க உள்ளார்.