DIY கரி முகமூடி: வீட்டிலேயே எளிய படிப்படியான வழிகாட்டி
வீட்டிலேயே செய்யக்கூடிய எளிய படிகள் - பிரகாசமான முகத்திற்கு DIY கரி முகமூடி
தேன், கற்றாழை, ரோஸ் வாட்டர் சேர்க்கையுடன் சருமம் சுத்தமாகவும் புத்துணர்ச்சியுடனும்
நம்முடைய சருமத்தில் தினமும் மாசு, தூசி, எண்ணெய் மற்றும் நச்சுக்கள் தேங்கி முகம் பிரகாசம் இழக்கிறது. பலர் பியூட்டி பார்லர் அல்லது விலையுயர்ந்த பியூட்டி புராடக்ட்ஸ் பயன்படுத்துகிறார்கள்.
ஆனால் வீட்டிலேயே இயற்கையான முறையில் சருமத்தை சுத்தமாகவும் பிரகாசமாகவும் மாற்றிக்கொள்ளலாம். அதற்கான சிறந்த வழிகளில் ஒன்று கரி (Activated Charcoal) முகமூடி ஆகும்.
கரி ஒரு சக்திவாய்ந்த சுத்திகரிப்பு பொருள். இது முகத்தில் உள்ள ஆழமான துவாரங்களை (pores) சுத்தம் செய்யும்.
முகத்தில் இருக்கும் excess oil, blackheads, pimples போன்றவற்றை குறைத்து சருமத்திற்கு fresh மற்றும் glowing look தரும்.
கரி முகமூடி தயாரிக்கும் முறைகள்
தேவையான பொருட்கள்
Activated charcoal – 1 டீஸ்பூன்
கற்றாழை ஜெல் – 1 டேபிள்ஸ்பூன்
தேன் – 1 டீஸ்பூன்
ரோஸ் வாட்டர் – சில துளிகள்
செய்முறை
ஒரு சுத்தமான பாத்திரத்தில் கரி பவுடரை போடுங்கள்.
அதில் கற்றாழை ஜெல், தேன் மற்றும் ரோஸ் வாட்டரை சேர்த்து நன்றாக கலக்கவும்.
முகத்தை நன்றாக கழுவி, காற்று இல்லாத இடத்தில் முகமூடியை சமமாக தடவவும்.
15–20 நிமிடங்கள் உலர விடுங்கள்.
பின்னர் வெதுவெதுப்பான தண்ணீரால் கழுவி முகத்தை மெதுவாக துடைக்கவும்.
பயன்பாடுகள்
முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்குகிறது.
பிளாக்ஹெட்ஸ், பிம்பிள்ஸ் குறையும்.
சருமத்திற்கு பளபளப்பை தருகிறது.
அதிக எண்ணெய் (oily skin) குறைக்க உதவுகிறது.
முதன்முதலில் பயன்படுத்தும் முன் சிறிய பகுதியைச் சோதித்து பார்த்து பிறகு முகத்தில் பயன்படுத்தவும். வாரத்திற்கு 1 அல்லது 2 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|