காசா நகரில் இஸ்ரேல் விமானத் தாக்குதல்: 40 பேர் பலி
கிழக்கு ஜெருசலேமில் துப்பாக்கிச் சூடு - குற்றவாளிகள் சுட்டுக் கொலை
காசா போர் தீவிரம்: 50க்கும் மேற்பட்ட உயர்மாடிக் கட்டிடங்கள் இடிந்து நாசம்
காசா பகுதியில் நேற்று அதிகாலை தொடங்கிய இஸ்ரேல் தாக்குதல்களில் குறைந்தது 40 பேர் பலியாகியுள்ளனர்.
காசா நகரில் உள்ள பல பகுதிகள் கடுமையாக தாக்கப்பட்டுள்ளன.
இதன் போது, ஒரு உயர்மாடிக் கட்டிடமும் முற்றிலும் சிதைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களின் காரணமாக இதுவரை 50க்கும் மேற்பட்ட உயர்மாடிக் கட்டிடங்கள் நாசமாகியுள்ளன.
இதனிடையே, ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இதில் குறைந்தது 6 பேர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்துள்ளனர் என இஸ்ரேல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலை மேற்கொண்டவர்கள் மேற்கு கரையிலிருந்து வந்த இரு பாலஸ்தீனர்கள் என கூறப்பட்டுள்ளது.
சம்பவத்துக்குப் பின் அவர்கள் இருவரையும் இஸ்ரேல் காவல்துறை சுட்டுக் கொன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காசா மற்றும் ஜெருசலேம் பகுதிகளில் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் இந்த வன்முறைச் சம்பவங்கள், அப்பகுதி மக்களை அச்சத்திலும் அலைச்சலிலும் ஆழ்த்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|