“உண்மையை மறைக்க முடியாது” – எடப்பாடி
கரூர் சம்பவம்: விசாரணை CBI-க்கு மாற்றப்பட வேண்டும் – எடப்பாடி
சமூக வலைதள வதந்திகள் என்று சொல்லி உண்மையை மறைக்க முடியாது – எடப்பாடி பழனிசாமி
கரூர் நிகழ்வைத் தொடர்ந்து தமிழக அரசின் நடவடிக்கைகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கேள்விகளை எழுப்பியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கரூரில் நிகழ்ந்த துயரத்தை அரசியல் விலக்கி நான் சந்தித்து பேசினேன். ஆனால் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சமூக வலைதளங்களில் அவதூறு பரவுகிறது என்று கூறினார்.
அதனால் கேள்வி எழுகிறது – மக்கள் கேட்கும் சந்தேகங்கள், சம்பவ இடத்தில் ஏற்பட்ட குறைகள், காவல்துறையின் நடவடிக்கைகள், இவை எல்லாம் எப்படி வதந்தி எனக் கூற முடியும்?" எனக் கேள்வி எழுப்பினார்.
தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர் வெளியிட்டுள்ள போட்டோஷூட் வீடியோவே சாட்சி!
நேற்று, நான் கரூர் சென்று உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தி, சிகிச்சை பெறுவோருக்கு ஆறுதல் தெரிவித்து செய்தியாளர்களை சந்தித்த போது, எந்த வித…— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) September 29, 2025
மேலும் அவர், “சம்பவத்திற்கு பின் அரசின் ஒருதலைப்பட்சமான விசாரணை நடவடிக்கைகள் மக்களிடம் நம்பிக்கை அளிக்கவில்லை. உண்மையை வெளிக்கொணர்வதற்காக, இந்த வழக்கு மத்திய புலனாய்வு அமைப்பிற்கு (CBI) மாற்றப்பட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
அவர் மேலும், “தலைமைச் செயலாளர் தலைமையிலான விசாரணை மக்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாது. நடந்ததைக் குறைத்துக் காட்டும் பாணியில் அரசு நடந்து கொள்கிறது. மக்கள் துயரத்தில் இருக்கும் இந்த நேரத்தில் அரசியல் பிரசார வீடியோக்கள் வெளியிடுவது முறையல்ல” என்றும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|