சொகுசு கார் வாங்கிய பகத் பாசில் - விலை தெரியுமா?
13 கோடி மதிப்புள்ள ஃபெராரி ப்ரோசான்ஸ் கார் – பகத் பாசிலின் புதிய ஆடம்பரம்
பான் இந்தியா நடிகர் பகத் பாசிலின் கார்கலெக்ஷனில் சேர்ந்த 13 கோடி ஃபெராரி
பான் இந்தியா நடிகராக வெற்றிகரமாக வளர்ந்து வரும் மலையாள நடிகர் பகத் பாசில், தனது சொகுசு கார் களஞ்சியத்தில் புதிய ஃபெராரி ப்ரோசான்ஸ் காரை சேர்த்துள்ளார். இந்த தகவல் திரைத்துறையில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
மலையாள திரையுலகில் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த பகத் பாசில், சமீப ஆண்டுகளில் பான் இந்தியா திரைப்படங்களில் நடித்து அதிக வரவேற்பைப் பெற்றார்.
புஷ்பா மற்றும் விக்ரம் போன்ற சூப்பர் ஹிட் படங்களில் அவரது கதாபாத்திரங்கள் ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. தமிழில் மாரி செல்வராஜ் இயக்கிய மாமன்னன் திரைப்படத்தில் அவர் நடித்த முக்கியமான கதாபாத்திரம் பெரும் வரவேற்பை பெற்றது.
சினிமாவில் தனது தனித்துவமான பயணத்தை தொடர்ந்துவரும் அவர், கார்கள் மீது கொண்டுள்ள ஆர்வத்திற்கும் பிரபலமாகிறார். அவரது சொகுசு கார் கலெக்ஷனில் ஏற்கனவே மெர்சிடிஸ் பென்ஸ், ரேஞ்ச் ரோவர், லேண்ட் ரோவர், போக்ஸ் வேகன் உள்ளிட்ட பல பிரீமியம் வாகனங்கள் உள்ளன.
இந்த நிலையில், பகத் பாசில் சமீபத்தில் உலகின் பிரபலமான ஆடம்பர வாகன நிறுவனமான ஃபெராரியின் ப்ரோசான்ஸ் மாடல் காரை வாங்கியுள்ளார். வரிகள் மற்றும் பிற கட்டணங்களுடன் சேர்த்து, இந்த காரின் விலை சுமார் 13 கோடி ரூபாய் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.
சினிமா உலகில் தனது பன்முக திறமையாலும், சொகுசான வாழ்க்கை முறையாலும் ரசிகர்களை கவர்ந்துவரும் பகத் பாசிலின் புதிய ஃபெராரி, அவரை ரசிகர்களிடையே மேலும் பேச வைக்கும் வகையில் உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|