இலங்கை
புறக்கோட்டை கட்டிடத்தில் பெரும் தீ விபத்து
byKirthiga|about 2 months ago
புறக்கோட்டை கட்டிடத்தில் பெரும் தீ விபத்து
புறக்கோட்டை 1ம் குறுக்கு தெரு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்து - அச்சத்தில் வியாபாரிகள்
கொழும்பு புறக்கோட்டை, முதல் குறுக்கு தெருவிலுள்ள ஒரு கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் அமைந்த கடையில் திடீரென தீ பரவியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தீ விபத்தை கட்டுப்படுத்துவதற்காக கொழும்பு தீயணைப்பு படையினர் 12 தீயணைப்பு வண்டிகளை உடனடியாக அனுப்பி வைத்து, தீ பரவாமல் தடுக்கும் பணிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
இதனுடன், இலங்கை வான்படை தீயணைப்பு பிரிவு சார்பாகவும் இரண்டு தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மேலும், புறக்கோட்டை முதல் குறுக்கு தெருவில் ஏற்பட்டுள்ள இந்த தீயை அணைக்கும் நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக ஒரு Bell 212 ஹெலிகாப்டரும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வான்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|