விளையாட்டு (கிரிக்கெட்)
டெஸ்ட் கிரிக்கெட் வீரர் ஜயானந்த வர்ணவீர காலமானார்
byKirthiga|23 days ago
இலங்கையின் முன்னாள் டெஸ்ட் வீரர் ஜயானந்த வர்ணவீர 64 வயதில் மறைவு
முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் ஜயானந்த வர்ணவீர மறைவு
முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் ஜயானந்த வர்ணவீர 64 வயதில் காலமானார்.
ஜயானந்த வர்ணவீர, காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் பிரதான பீட்ச் பராமரிப்பாளராகவும் (Chief Curator) பணியாற்றியவர். அவர் 1986 முதல் 1994 வரையிலான காலப்பகுதியில் இலங்கை அணிக்காக 10 டெஸ்ட் போட்டிகளிலும் 6 ஒருநாள் சர்வதேச (ODI) போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
1994 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற தனது கடைசி டெஸ்ட் போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
விளையாட்டு வாழ்க்கையை முடித்த பின்னர், ஜயானந்த வர்ணவீர பல்வேறு நிர்வாகப் பொறுப்புகளில் பணியாற்றினார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|