போலி ரூ.5,000 தாள்களுடன் நால்வர் கைது
ஹபரணை, அனுராதபுரம், பிஹிம்பியகொல்லேவில் சோதனை
போலி ரூ.5,000 பணத்துடன், மடிக்கணினி, ஸ்கேனர், அச்சுப்பொறி பறிமுதல்
ஹபரணை, அனுராதபுரம் மற்றும் பிஹிம்பியகொல்லேவ பகுதிகளில் பெருமளவிலான போலி ரூ.5,000 நோட்டுகள் கையிருப்பில் வைத்திருந்த நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முதலில் ஹபரணையில் ஒருவரிடம் மூன்று போலி ரூ.5,000 நோட்டுகள் இருந்தமையால் அவர் கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவர் வழங்கிய தகவலின் அடிப்படையில், ஹபரணை மற்றும் அனுராதபுரம் பகுதிகளில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டதுடன் அவர்களிடமிருந்து தலா இரண்டு போலி நோட்டுகள் மீட்கப்பட்டன.
தொடர்ந்த விசாரணைகளின் பேரில் இன்று (18) பிஹிம்பியகொல்லேவ பகுதியில் மற்றொருவர் கைது செய்யப்பட்டார். அங்கு நடத்தப்பட்ட சோதனையில் 138 போலி ரூ.5,000 நோட்டுகள், ஒரு மடிக்கணினி, ஸ்கேனர் மற்றும் அச்சுப்பொறி ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்ட நால்வரும் 23 முதல் 42 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், இவர்கள் அனைவரும் ஹபரணை மற்றும் அனுராதபுரத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|