Home>இலங்கை>இன்று நள்ளிரவு முதல்...
இலங்கை

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம்

byKirthiga|about 1 month ago
இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம்

டீசல், பெட்ரோல் 95, கெரோசின் விலை குறைப்பு – சிபெட்கோ அறிவிப்பு

பெட்ரோல் 92 மற்றும் சூப்பர் டீசல் விலையில் மாற்றமில்லை

இன்று (30) நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம் செய்யப்படுவதாக இலங்கை சிபெட்கோ நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி, ஆட்டோ டீசல் விலை லிட்டருக்கு ரூ.6 குறைக்கப்பட்டு ரூ.277 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் 95 ஆக்டேன் விலை லிட்டருக்கு ரூ.6 குறைக்கப்பட்டு ரூ.335 என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கெரோசின் விலை லிட்டருக்கு ரூ.5 குறைக்கப்பட்டு ரூ.180 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பெட்ரோல் 92 ஆக்டேன் மற்றும் சூப்பர் டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என சிபெட்கோ தெரிவித்துள்ளது.

புதிய விலைகள் (30ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுல்):

  • ஆட்டோ டீசல் – ரூ. 277 (ரூ.6 குறைப்பு)

  • பெட்ரோல் 95 ஆக்டேன் – ரூ. 335 (ரூ.6 குறைப்பு)

  • கெரோசின் – ரூ. 180 (ரூ.5 குறைப்பு)

  • சூப்பர் டீசல் – மாற்றமில்லை

  • பெட்ரோல் 92 ஆக்டேன் – மாற்றமில்லை


செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்