உலக சந்தை விலை உயர்வால் இலங்கையில் தங்கம் ரூ.8,000 உயர்வு
உலக சந்தை உயர்வைத் தொடர்ந்து இலங்கையில் தங்க விலை வரலாறு காணாத உயர்வை எட்டியது
உலக தங்க சந்தையில் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ள நிலையில், இலங்கையிலும் தங்க விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. உலக சந்தை தரவுகளின்படி, தங்கத்தின் விலை முதன்முறையாக ஒரு அவுன்ஸுக்கு 3,950 அமெரிக்க டாலரைத் தாண்டியுள்ளது.
இந்த உலகளாவிய விலை உயர்வின் தாக்கத்தால், இலங்கையிலுள்ள தங்க விலையும் கடந்த சனிக்கிழமையுடன் ஒப்பிடும்போது சுமார் ரூ.8,000 வரை அதிகரித்துள்ளது.
இன்று காலை (7) நிலவரப்படி, கொழும்பு புறக்கோட்டை சந்தையில் 22 காரட் தங்க ஒரு சவரன் விலை ரூ.2,90,500 ஆக உயர்ந்துள்ளது. இது கடந்த சனிக்கிழமையில் பதிவு செய்யப்பட்ட ரூ.2,83,000 இலிருந்து சுமார் ரூ.7,500 உயர்வாகும்.
அதேபோல், 24 காரட் தங்கத்தின் ஒரு சவரன் விலையும் ரூ.3,06,000 இலிருந்து ரூ.3,14,000 ஆக உயர்ந்துள்ளதாக புறக்கோட்டை சந்தை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
வியாபாரிகள் கூறுவதாவது, கடந்த சில நாட்களாக சர்வதேச தங்க விலையில் ஏற்பட்ட திடீர் ஏற்றம், அமெரிக்க டாலர் மதிப்பில் ஏற்பட்ட மாறுபாடுகள் மற்றும் உலகளாவிய நிதி சந்தை பதட்டம் ஆகியவை இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகும்.
சமீப வாரங்களில் பல நாடுகளின் மத்திய வங்கிகள் தங்களது வெளிநாட்டு கையிருப்புகளில் தங்கத்தின் அளவை அதிகரித்துள்ளதும் உலக தங்க விலையை மேலும் தூண்டியுள்ளது.
இதனையடுத்து, நகை வியாபாரிகள் பொதுமக்களுக்கு தங்கம் வாங்குவதில் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தி வருகின்றனர், ஏனெனில் விலை இன்னும் சில நாட்களில் மாறுபடும் வாய்ப்பும் உள்ளது.
தங்க அலகு | தங்க விலை |
|---|---|
தங்க அவுன்ஸ் | ரூ. 1,202,006.00 |
24 காரட் 1 கிராம் | ரூ. 42,400.00 |
24 காரட் 8 கிராம் (1 பவுன்) | ரூ. 339,200.00 |
22 காரட் 1 கிராம் | ரூ. 38,870.00 |
22 காரட் 8 கிராம் (1 பவுன்) | ரூ. 310,950.00 |
21 காரட் 1 கிராம் | ரூ. 37,100.00 |
21 காரட் 8 கிராம் (1 பவுன்) | ரூ. 296,800.00 |