கூகுள் எச்சரிக்கை: ஹேக்கர்கள் மிரட்டல் மின்னஞ்சல்
Oracle பயன்பாடுகள் தரவு திருட்டு குற்றச்சாட்டில் ஹேக்கர்கள் மிரட்டல்
பல நிறுவன நிர்வாகிகளுக்கு ஹேக்கர்கள் நுணுக்கத் தகவல் திருட்டு மிரட்டல்
அல்பபெட் நிறுவனத்தின் கூகுள், ஹேக்கர்கள் தங்களது ஓரக்கிள் (Oracle) வணிக பயன்பாடுகளில் இருந்து நுணுக்கமான தரவுகளை திருடியதாகக் கூறி, பல நிறுவனங்களின் உயர்நிலை நிர்வாகிகளுக்கு மிரட்டல் மின்னஞ்சல்கள் அனுப்பி வருவதாக தெரிவித்துள்ளது.
கூகுள் வெளியிட்ட அறிக்கையில், cl0p என்ற ரேன்சம்வேர் கும்பலுடன் தொடர்பு கொண்டதாகக் கூறும் ஒரு குழு, “Oracle E-Business Suite” லிருந்து தகவல்களை திருடியதாகக் கூறி, பல நிறுவனங்களின் நிர்வாகிகளுக்கு மின்னஞ்சல்கள் அனுப்பி வருவதாக தெரிவித்துள்ளது.
ஆனால், இக்குற்றச்சாட்டுகள் உண்மையா என்பதில் உறுதியான ஆதாரங்கள் இல்லை என்று கூகுள் எச்சரித்துள்ளது.
இதே நேரத்தில், cl0p கும்பலும் Oracle நிறுவனமும் இதுகுறித்து கருத்து தெரிவிக்கவில்லை. கூகுள், இந்த மின்னஞ்சல் பிரசாரம் மிகப் பெரிய அளவில் நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்டாலும், கூடுதல் விவரங்களை பகிரவில்லை.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|