Home>இலங்கை>அரசு சேவைகளுக்காக ‘S...
இலங்கை

அரசு சேவைகளுக்காக ‘Supper App’ வரவுள்ளது

byKirthiga|about 2 months ago
அரசு சேவைகளுக்காக ‘Supper App’ வரவுள்ளது

அரசு சேவைகளை ஒரே இடத்தில் ஒருங்கிணைக்க ‘Supper App’ திட்டம்

அரசு சேவைகளை எளிதில் பெற ஒருங்கிணைந்த ‘Government Supper App’ – அமைச்சரவை ஒப்புதல்

அரசு சேவைகளைப் பொதுமக்கள் ஒரே ஒருங்கிணைந்த டிஜிட்டல் தளத்தின் மூலம் எளிதாகப் பெறுவதற்காக ‘கவர்ன்மெண்ட் சூப்பர் ஆப்’ ஒன்றை உருவாக்கும் யோசனைக்கு அமைச்சரவை தனது ஒப்புதலை வழங்கியுள்ளது.

தற்போது பல்வேறு துறைகளில் அரசு சேவைகள் வழங்கப்படுவது சீரற்ற முறையில் நடைபெறுவதாலும், பல்வேறு சிஸ்டம்கள் வழியாக மீண்டும் மீண்டும் அங்கீகாரம் பெறுதல், ஒரே தரவுகளை மீண்டும் பதிவு செய்ய வேண்டிய அவசியம் போன்ற காரணங்களால் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர் என அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், இவ்வாறு நடைபெறும் சீரற்ற நடைமுறைகள் காரணமாக ஆண்டுதோறும் ரூ.500 மில்லியனுக்கும் அதிகமான பொருளாதார இழப்புகள் நாட்டிற்கு ஏற்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்