2025 புலமைப்பரிசில் மறுபரிசீலனை முடிவுகள் வெளியீடு
1911 உள்ளிட்ட தொலைபேசி எண்களில் பரீட்சை முடிவுகள் வெளியீடு
2025ம் ஆண்டுக்கான 5ஆம் வகுப்பு புலமைப்பரிசில் மறுபரிசீலனை முடிவுகள் வெளியீடு
பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, 2025 ஆம் ஆண்டுக்கான 5ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சையின் மறுபரிசீலனை முடிவுகள் தற்போது இணையதளத்தின் மூலம் வெளியிடப்பட்டுள்ளன.
மாணவர்கள் தங்கள் சரியான தேர்வு குறியீட்டு எண்ணை (Index Number) உள்ளீடு செய்து, தேர்வுத் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையதளங்களான www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk ஆகியவற்றில் முடிவுகளைப் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2025 ஆகஸ்ட் 10ஆம் திகதி நடைபெற்ற 5ஆம் வகுப்பு புலமைப்பரிசில் தேர்வின் முதற்கட்ட முடிவுகள் 2025 செப்டம்பர் 04ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்தன.
மறுபரிசீலனை முடிவுகள் தொடர்பான ஏதேனும் சந்தேகங்கள் அல்லது தகவல்களுக்கு, மாணவர்கள் கீழ்க்கண்ட தொலைபேசி எண்களின் மூலம் தேர்வுத் திணைக்களத்தைத் தொடர்புகொள்ளலாம்:
தொலைபேசி எண்கள்:
Hotline – 1911
School Examinations Organization and Results Branch – 011-2784208, 011-2784537, 011-2785922