ஹமாஸ் வெளியிட்ட 20 சிறைபிடிக்கப்பட்டோர் பெயர்கள்
காசா போரின் முதல் கட்ட அமைதிக்கான முக்கிய முன்னேற்றம்
இஸ்ரேலுடன் போர்நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் விடுவிக்கப்படவுள்ளோரின் பட்டியல் வெளியீடு
பாலஸ்தீன அமைப்பான ஹமாஸ், திங்கட்கிழமை, இஸ்ரேலுடன் செய்யப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தின் கீழ் விடுவிக்கப்படவுள்ள 20 இஸ்ரேல் சிறைபிடிக்கப்பட்டோரின் பெயர் பட்டியலை வெளியிட்டது.
ஹமாஸ் வெளியிட்ட பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்கள்: பார் அப்ரகாம் கூப்பர்ஸ்டெயின், எவியதார் டேவிட், யோசேப்-ஹைம் ஓஹானா, சேகெவ் கால்போன், அவினாதன் ஓர், எல்கானா போஹ்பாட், மேக்ஸிம் ஹெர்கின், நிம்ரோட் கோஹென், மதன் அங்க்ரெஸ்ட், மதன் ஜங்கௌகர், ஈதன் ஹார்ன், ஈதன் அப்ரகாம் மோர், காலி பெர்மான், சிவ் பெர்மான், ஒம்ரி மிரான், ஆலோன் ஓஹெல், கை கில்போவா-டலால், ரோம் ப்ராஸ்லவ்ஸ்கி, அரியல் குனியோ மற்றும் டேவிட் குனியோ ஆகியோரை உள்ளடக்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பெயர் பட்டியல், ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையிலான சமீபத்திய போர்நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு முக்கிய கட்டமாகக் கருதப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|