Home>தொழில்நுட்பம்>ஸ்மார்ட்போனில் Scree...
தொழில்நுட்பம்

ஸ்மார்ட்போனில் Screenshot எடுப்பதை கண்டுப்பிடித்தவர்

bySite Admin|3 months ago
ஸ்மார்ட்போனில் Screenshot எடுப்பதை கண்டுப்பிடித்தவர்

iPhone முதல் Android வரை – ஸ்மார்ட்போனில் ஸ்கிரீன்ஷாட் வந்த வரலாறு

ஸ்மார்ட்போனில் ஸ்கிரீன்ஷாட் அம்சம் எப்படி வந்தது? முழு தகவல்

இன்று ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்கள் அனைவருக்கும், ஸ்கிரீன்ஷாட் எடுப்பது ஒரு சாதாரண விஷயமாகிவிட்டது.

சுவாரஸ்யமான மீம்ஸ்களிலிருந்து, முக்கிய தகவல்கள் வரை, அனைத்தையும் சேமிக்கவும், நண்பர்களுடன் பகிரவும் ஸ்கிரீன்ஷாட் பயன்படுகிறது.

ஆனால், இந்த வசதி எப்படி வந்தது? யார் முதலில் அறிமுகப்படுத்தினார்? என்ற கேள்விகள் பலருக்கு தெரியாது.

ஸ்மார்ட் போன்களுக்கு முன்பே, கணினிகளில் “ஸ்கிரீன் கிராப்” என்ற அம்சம் இருந்தது. ஆனால் மொபைல் போன்களில் இதைச் செய்ய, ஆரம்பத்தில் மூன்றாம் தரப்பு ஆப்ஸ்களை (third-party apps) பயன்படுத்த வேண்டியிருந்தது.

TamilMedia INLINE - 2025-08-16T000158



2008ல், iPhone OS 2 மூலம், ஸ்மார்ட் போன்களில் ஸ்கிரீன்ஷாட் அம்சம் அதிகாரப்பூர்வமாக அறிமுகமானது. பவர் பட்டன் + ஹோம் பட்டனை ஒரே நேரத்தில் அழுத்தி ஸ்கிரீன்ஷாட் எடுக்கலாம் என்ற வசதி அப்போது வந்தது.

Android பயனர்களுக்கு, இந்த அம்சம் அதிகாரப்பூர்வமாக 2011 அக்டோபரில் வெளியான Android 4.0 Ice Cream Sandwich OS-ல் வந்தது.

அதிலிருந்து, பவர் + வால்யூம் டவுன் பட்டன் shortcut பொதுவான முறையாக பயன்படுகிறது.

பின்னர், ஸ்க்ரோலிங் ஸ்கிரீன்ஷாட் வசதி முதலில் Samsung Galaxy போன்களில் வந்தது. இன்று, iOS மற்றும் Android போன்களில் ஸ்கிரீன் ரெக்கார்டிங், மார்க்அப், க்ராப்பிங் போன்ற கூடுதல் வசதிகளுடன் ஸ்கிரீன்ஷாட் ஒரு முழுமையான கருவியாகிவிட்டது.

ஒரு நபர் அல்லது கண்டுபிடிப்பாளருக்கு நேரடியாக க்ரெடிட் கொடுக்க முடியாத நிலையில், ஸ்மார்ட் போனில் ஸ்கிரீன்ஷாட் அம்சத்தை முதலில் கொண்டுவந்தது Apple என்பதால், அதற்கான புகழ் ஆப்பிளுக்கே சென்றது.

TamilMedia INLINE - 2025-08-16T000243