Home>சுற்றுலா>இந்தியர்களுக்கு தாய்...
சுற்றுலா

இந்தியர்களுக்கு தாய்லாந்து e-Visa விண்ணப்ப வழிகாட்டி

bySuper Admin|2 months ago
இந்தியர்களுக்கு தாய்லாந்து e-Visa விண்ணப்ப வழிகாட்டி

ஆன்லைனில் தாய்லாந்து விசா பெறுவதற்கான படிப்படியான செயல்முறை

இந்தியர்கள் தாய்லாந்து e-Visa பெறுவது எப்படி? முழுமையான தகவல்

இந்தியர்களுக்கு தாய்லாந்து செல்ல விசா பெறுவது தற்போது மிகவும் எளிதாகியுள்ளது. முந்தைய காலங்களில் தூதரகத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டியிருந்த நிலையில், தற்போது ஆன்லைன் ஈ-விசா (E-Visa) முறையில் இந்தியர்கள் தாய்லாந்து விசாவிற்கு விண்ணப்பிக்கலாம்.

இது நேரத்தை மிச்சப்படுத்துவதோடு, எளிதான முறையில் பயணத்தை திட்டமிட உதவுகிறது.

முதலில் விண்ணப்பதாரர் தாய்லாந்தின் அதிகாரப்பூர்வ e-visa இணையதளம் (https://www.thaievisa.go.th/) சென்று புதிய கணக்கை உருவாக்க வேண்டும்.

அங்கு "Tourist Visa (TR)" என்பதைத் தேர்ந்தெடுத்து விண்ணப்ப படிவத்தை நிரப்ப வேண்டும்.

இந்த படிவத்தில் தனிப்பட்ட விவரங்கள், பாஸ்போர்ட் தகவல்கள், பயண விவரங்கள், தங்கும் ஹோட்டல் முகவரி போன்றவை சரியாக உள்ளிடப்பட வேண்டும்.

TamilMedia INLINE (48)


பின்னர் தேவையான ஆவணங்களை ஸ்கேன் செய்து அப்பலோட் செய்ய வேண்டும்.

அவை:

  • 6 மாதங்களுக்கு மேல் செல்லுபடியாகும் பாஸ்போர்ட்

  • சமீபத்திய பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்

  • தாய்லாந்தில் தங்கும் ஹோட்டல் முன்பதிவு ரசீது

  • திரும்பும் விமான டிக்கெட்

  • இந்திய வங்கி கணக்கில் குறைந்தது 50,000 ரூபாய் இருப்பதை நிரூபிக்கும் நிதி அறிக்கை


இந்த விவரங்கள் அனைத்தையும் சமர்ப்பித்த பிறகு விசா கட்டணத்தை (சுமார் 2,500–3,000 ரூபாய் வரை) ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

கட்டணம் செலுத்தப்பட்டதும், விண்ணப்ப எண் மற்றும் ரசீது வழங்கப்படும். விண்ணப்பம் பரிசீலனை செய்யப்பட்ட பிறகு, பொதுவாக 3–5 வேலை நாட்களுக்குள் ஈ-விசா மின்னஞ்சலில் கிடைக்கும்.

விசா கிடைத்ததும் அதை பிரிண்ட் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். தாய்லாந்து சென்றதும் பாஸ்போர்டுடன் சேர்த்து விமான நிலைய குடிவரவு அதிகாரிகளிடம் காண்பிக்க வேண்டும்.

இந்த ஆன்லைன் விசா முறையால் இந்திய சுற்றுலாப் பயணிகள் எளிதாக தாய்லாந்து பயணத்தை திட்டமிட முடிகிறது. எதிர்காலத்தில் கூடுதல் வகை விசாக்களும் முழுமையாக ஆன்லைன் செய்யப்பட வாய்ப்பு உள்ளது.