மொபைல் சார்ஜருக்கும் காலாவதி திகதியா?
சார்ஜர் எப்போது காலாவதியாகிறது என்பதை கண்டுபிடிப்பது எப்படி?
மொபைல் சார்ஜரின் ஆயுட்காலம் குறையும் அறிகுறிகள்
தினசரி நாம் பயன்படுத்தும் மொபைல் சார்ஜர் நம் வாழ்க்கையின் அத்தியாவசிய கருவிகளில் ஒன்றாகிவிட்டது. ஆனால், “சார்ஜருக்கும் காலாவதி தேதி இருக்குமா?” என்ற கேள்வி பலருக்கும் ஏற்படும்.
உண்மையில் ஒவ்வொரு மின்சார சாதனத்திற்கும் ஒரு குறிப்பிட்ட ஆயுட்காலம் இருக்கும். சார்ஜர் வெளியில் காலாவதி திகதி அச்சிடப்படாமல் இருந்தாலும், அதன் பயன்பாட்டு தரம், உற்பத்தி முறை மற்றும் மின்சார சுமை ஆகியவற்றைப் பொறுத்து காலத்திற்குப் பிறகு அதன் செயல்திறன் குறையத் தொடங்கும்.
பொதுவாக ஒரு தரமான சார்ஜர் 2 முதல் 3 ஆண்டுகள் வரை நல்ல நிலையிலேயே செயல்படும்.
அதற்குப் பிறகு சார்ஜ் வேகம் குறையலாம், சார்ஜர் அதிகமாக சூடேறலாம், சில சமயங்களில் மின்சாரம் சரியாக செல்லாமல் போன் பேட்டரிக்கும் சேதம் ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
சில சார்ஜர்கள் நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டால் உள்ளிருக்கும் கம்பி தளர்வு, பின்கள் kulirvu மற்றும் மின்சாரம் பாயும் கூறுகளில் சேதம் ஏற்படும்.
சார்ஜரின் “காலாவதி” நேரடியாக திகதியாக அல்லாமல், அறிகுறிகளால் புரிந்து கொள்ள முடியும். அதாவது சார்ஜ் ஆகும் நேரம் மிகவும் நீளமாகிவிட்டால், சார்ஜர் சத்தம் எழுப்பினால், அதிக வெப்பம் உண்டானால் அல்லது அடிக்கடி மின்சாரம் தடைப்பட்டால் அது காலாவதியாகி விட்டதாகக் கருதலாம்.
இதுபோன்ற நிலைகளில் தொடர்ந்து பயன்படுத்தினால் பேட்டரி ஆயுட்காலம் குறையும் அபாயம் அதிகம்.
எனவே சார்ஜர் தேர்வு செய்யும் போது எப்போதும் தரமான, அங்கீகரிக்கப்பட்ட பிராண்டுகளை மட்டும் பயன்படுத்த வேண்டும்.
மலிவு விலையில் கிடைக்கும் போலியான சார்ஜர்கள் மிக விரைவில் சேதமடைவதோடு மட்டுமல்லாமல் மொபைலுக்கும் தீங்கு விளைவிக்கும்.