முடி வளர்ச்சியை இரட்டிப்பாக்கும்.., வெந்தயம்-வெங்காயம்!
தலைமுடி நீளமா வளர வெந்தயமும் வெங்காயமும் இந்த மாதிரி பயன்படுத்துங்க
How to Grow Hair Naturally Using Fenugreek and Onion at home in tamil
நீளமான, பளபளப்பான, ஆரோக்கியமான தலைமுடி என்பது பலரின் கனவு.
ஆனால் அந்த கனவை சாதனையாக மாற்ற இயற்கையான வழிகளும் வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய தீர்வுகளும் உங்களிடம் இருக்கின்றன.
இங்கே நாம் அதைப் பற்றி தான் பேசப்போகிறோம் இயற்கை மூலிகைகள். அதாவது வீட்டில் இலகுவாக கிடைக்கும் வெந்தயம் மற்றும் வெங்காயம் பற்றி தான். இவை இரண்டும் சேரும்போது, உங்கள் முடியின் வளர்ச்சிக்கு ஒரு சிறந்த சக்தி கிடைக்கிறது.
ஹேர் மாஸ்க் செய்முறை:
தேவையானவை:
ஊறவைத்த வெந்தயம் (அரைத்தது)
வெங்காயச் சாறு
செய்முறை:
இரண்டையும் நன்கு கலக்கவும்.
தலைமுடியில் தடவி மெதுவாக மசாஜ் செய்யவும்.
30 நிமிடங்கள் ஊறவிட்டு ஷாம்பூவால் கழுவவும்.
ஹேர் கிளென்சர்:
தேவையானவை:
வெந்தயம் நீர் (கொதிக்கவைத்து வடிகட்டியதை)
வெங்காயச் சாறு
செய்முறை:
இரண்டையும் சேர்த்து கலக்கவும்.
ஷாம்பூவுக்கு பிறகு இந்த கலவையை விட்டு 10 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
சுத்தமான நீரால் அலசவும்.
தலை முடி எண்ணெய்:
தேவையானவை:
தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய்
வெந்தயம்
வெங்காயச் சாறு
செய்முறை:
எண்ணெயில் வெந்தயத்தை பொன்னிறமாக வறுக்கவும்.
வடிகட்டிய எண்ணெயில் வெங்காயச் சாறு சேர்க்கவும்.
தலைமுடியில் தடவி 2 மணி நேரம் ஊறவைத்து குளிக்கவும்.
குறிப்பு: முடி வளர்ச்சி என்பது ஒவ்வொரு நபரின் உடல் நிலை மற்றும் சூழலுக்கு ஏற்ப மாறுபடும். நியமமாக 2-3 மாதங்கள் தொடர்ந்து பயன்படுத்தினால் முடிவுகள் தெரியும்.