Home>வாழ்க்கை முறை>நலங்கு மாவு: முகப்பொ...
வாழ்க்கை முறை (அழகு)

நலங்கு மாவு: முகப்பொலிவுக்கு இயற்கையான ரகசியம்

byKirthiga|14 days ago
நலங்கு மாவு: முகப்பொலிவுக்கு இயற்கையான ரகசியம்

முகம் பொலிவாக, மென்மையாக மாற்றும் நலங்கு மாவு வீட்டிலேயே செய்வது எப்படி?

வீட்டிலேயே எளிதாக நலங்கு மாவு தயார் செய்வது எப்படி?

நமது முன்னோர்களின் காலத்திலிருந்தே “நலங்கு மாவு” அல்லது “அரிசி மா குழைவு” எனப்படும் மூலிகை கலவைகள், உடல் சுத்தம் மற்றும் முகப்பொலிவுக்கு பெரிதும் பயன்படுத்தப்பட்டன.

நவீன க்ரீம்களுக்கும், கெமிக்கல் பியூட்டி பொருட்களுக்கும் மாற்றாக, நலங்கு மாவு இன்று மீண்டும் பிரபலமடைந்துள்ளது. இது உடலிலுள்ள இறந்த செல்களை நீக்கி, தோலை மென்மையாகவும் பொலிவாகவும் மாற்றுகிறது.

வீட்டிலேயே நலங்கு மாவை தயார் செய்வது மிகவும் எளிது.

முதலில், கொண்டைக்கடலை மாவு – 4 மேசைக்கரண்டி, பச்சைபயறு மாவு – 3 மேசைக்கரண்டி, மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன், சந்தனம் தூள் – 2 டீஸ்பூன், ரோஸ் பெட்டல் தூள் – 1 டீஸ்பூன், வேப்பிலை தூள் – 1 டீஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் – சிறிதளவு, ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்.

முகத்தில் அல்லது உடலில் பயன்படுத்தும்போது, சிறிதளவு மாவை எடுத்து தயிர், பால், அல்லது ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்டாக கலக்கவும். அதை முகம், கழுத்து, கைகள், கால்கள் போன்ற இடங்களில் தடவி 15 நிமிடங்கள் விட்டு, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவிக் கொள்ளலாம்.

நலங்கு மாவை வாரத்தில் 2 முதல் 3 முறை வரை பயன்படுத்தலாம். இது தோலை சுத்தப்படுத்தி, எண்ணெய் சுரப்பை குறைத்து, கருமை புள்ளிகளை மெல்ல அழிக்கிறது. மேலும், இது முகத்திற்கு இயற்கையான ஒளியை வழங்கி, ஸ்கின் டோனை சமநிலைப்படுத்தும்.

கெமிக்கல் இல்லாததால், எந்தவித பக்கவிளைவுமின்றி இதனை நீண்ட காலம் பயன்படுத்தலாம். தொடர்ந்து பயன்படுத்தும் போது முகத்தில் இயற்கையான பிரகாசமும் ஆரோக்கியமும் தென்படும். இதனால் நமது பாட்டி காலத்து அழகு ரகசியம் இன்று மீண்டும் நம்மை நோக்கி திரும்பி வந்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்