இணையத்தில் பாதுகாப்பாக இருப்பது எப்படி?
இன்றைய டிஜிட்டல் உலகத்தில், ஒவ்வொரு நாளும் மோசடி நடந்து வருகிறது.
இணையத்தில் உங்கள் தகவல்கள் பாதுகாப்பா அல்லது ஆபத்தா?
இன்றைய டிஜிட்டல் உலகத்தில், ஒவ்வொரு நாளும் இணையத்தில் ஏராளமான தகவல்களை பகிர்ந்து வருகிறார்கள். Facebook, Instagram, TikTok, YouTube, WhatsApp போன்ற சமூக ஊடகங்கள் வாழ்வின் ஒரு பகுதியாக மாறிவிட்டன. ஆனால் இந்த வசதிக்கேடுகளுக்கு பின்னால் மிகவும் மிகுந்த அபாயம் ஒன்று புதைந்து கொண்டிருக்கிறது, அது வேறு ஒன்றுமில்லை- தனிப்பட்ட தகவல்களின் பாதுகாப்பு.
நாம் ஒரு புகைப்படம் பகிரும் போதே, அந்த இடம், நேரம், கமெண்ட்கள், ஷேர்கள் போன்ற பல தகவல்கள் அந்த சமூக ஊடக நிறுவனங்களின் சேமிப்பு மையத்தில் பதிவு செய்யப்படுகிறது. இன்னும் மோசமாக, சில செயலிகள் நம் இடம், சுயவிவரம், தொடர்பு பட்டியல், மொபைலில் உள்ள மற்ற செயலிகள் பற்றிய தகவல்களையும் அனுமதி இல்லாமல் திரட்டுகின்றன.
டேட்டா பாதுகாப்பு
பலருக்கு இது தெரியாமல் இருக்கலாம். ஆனால் உண்மை என்னவென்றால், நாம் ஓர் “Accept” பட்டனை அழுத்தும் போதே, நம்முடைய தனிப்பட்ட தகவல்களை பகிரும் உரிமையை அந்த நிறுவனத்திடம் ஒப்படைத்துவிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் நம்மிடம் தோன்றும் ஒரு தவறான நம்பிக்கை என்னவென்றால், “நான் யாரும் இல்ல, எனது தகவல்களை யார் திருடுவார்கள்?” என்ற எண்ணம். ஆனால் இது மிக மிக ஆபத்தான மாயை. ஒரு சாதாரண மொபைல் எண், ஒரு படம், ஒரு பிறந்த நாள், ஒரு முகவரி — இவை அனைத்தும் சேரும் போதே, ஒருவர் மீது போலி கணக்கு உருவாக்க, வங்கி மோசடி செய்ய, இணைய வழி மிரட்டல் ஏற்படுத்த போதுமானது.
இலங்கையில் சமீபத்திய ஆண்டுகளில் online scams, phishing attacks, fake profile frauds மற்றும் romance frauds அதிகரித்து வருகின்றன. பலர் இது தொடர்பாக காவல் நிலையங்களில் முறைப்பாடும் செய்யவில்லை. காரணம்? வெட்கம், பயம், அல்லது “இதிலிருந்து என்ன முடியும்?” என்ற ஏமாற்ற உணர்வு. ஆனால் இந்த மௌனம் தான் மோசடிக்காரர்களை மேலும் துணிச்சலாக மாற்றுகிறது.
பல்வேறு நிறுவங்கள், குறிப்பாக இலவசமாக செயலிகள் தருவதாகக் கூறும் பின்புலத்தில், தரவுகளை சேகரித்து மூன்றாம் தரப்பு நிறுவனங்களுக்கு விற்கின்றன. உங்கள் விருப்பங்கள், சுத்தமான browsing history, conversations – இவை அனைத்தும் ஒரு பொருளாகப் பார்க்கப்படுகிறது. எங்கு செல்லுகிறீர்கள், எதை விரும்புகிறீர்கள், எந்த வகையான வீடியோக்களை பார்க்கிறீர்கள் என்பதை அடிப்படையாக வைத்து உங்களுக்கான விளம்பரங்கள், முறைகேடான செய்தி அழைப்புகள், மோசடி தொடர்புகள் உருவாகின்றன.
அப்படியென்றால் நம்மால் என்ன செய்ய முடியும்?
முதலில், நம்முடைய தனிப்பட்ட தகவல்களை யாருடனும் பகிரும் முன் சிந்திக்க வேண்டும். சமூக ஊடகங்களில் “Public” எனப் பதிவு செய்வதை தவிர்க்க வேண்டும். Two-Factor Authentication (2FA) பயன்படுத்த வேண்டும். விரைவாகச் செயலிகள் மீது நம்பிக்கை வைக்க வேண்டாம். பயன்படுத்தும் செயலியின் permissions (அனுமதிகள்) முறையாக பரிசோதிக்க வேண்டும். அத்துடன், Google, Facebook போன்ற சேவைகளின் “Privacy Settings” பக்கங்களை பார்வையிட்டு, தேவையில்லாத பகிர்வுகளை குறைத்துவிடலாம்.
புதிய செயலிகளை நிறுவும் முன் அதன் background, user reviews, மற்றும் permissions பட்டியலை அவதானிக்க வேண்டும். உங்கள் மொபைலில் Antivirus அல்லது Data protection app வைத்திருப்பது நல்லது. முக்கியமானவையாகக் கருதப்படும் தகவல்களை cloud அல்லது unfamiliar sites-ல் சேமித்து வைப்பது தவிர்க்கப்பட வேண்டும்.
இலங்கையில் “Personal Data Protection Act” போன்ற சட்டங்கள் உருவாக்கப்பட்டாலும், அதன் கடுமையான நடைமுறை இன்னும் பலருக்குத் தெரியவில்லை. உங்களுடைய data ஒரு சொத்து. அது உங்கள் விருப்பமின்றி பயன்படுத்தப்படும் பொழுது, அது ஒரு தகவல் களவாடம். இதற்கான விழிப்புணர்வை பள்ளி முதல் சமூக ஊடகங்கள்வரை பரப்பிக்கொள்வது மிகவும் அவசியமான ஒன்று.
இன்றைய இணைய வாழ்க்கையில் வசதிகளோடு ஆபத்துகளும் சேர்ந்து வருகின்றன. நம்முடைய தகவல்களின் மதிப்பை உணராமல் நாம் அதை வெளிப்படையாக பகிர்ந்தால், நாளைய பிரச்சனைகளுக்கு நாம் தான் காரணமாவோம்.
சமூக ஊடகங்களை பயன்படுத்துவது தவறு இல்லை; ஆனால் அதனைப் பயன்படுத்தும் விதம் முக்கியம். விழிப்புடன், பாதுகாப்புடன், விவேகத்துடன் இணையத்தில் நடந்து கொள்ளுங்கள். உங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாப்பது உங்கள் கடமை மட்டுமல்ல — உங்கள் உரிமையும் கூட.