வாட்ஸ்அப்பில் Delete Message-ஐ மீட்டெடுக்கும் வழிகள்
Android மற்றும் iPhone-இல் எளிய Restore முறைகள்
எதிர்கால பாதுகாப்புக்கு Auto Backup எவ்வாறு அமைப்பது
சில நேரங்களில் கவனக்குறைவால் “அனைவருக்கும் நீக்கு” (Delete for Everyone) என்ற விருப்பத்தை அழுத்தி விட்டால், அந்த முக்கியமான செய்தி மாயமாக இழந்துவிட்டதாக நாமே நினைத்துக் கொள்வோம்.
ஆனால் உண்மையில், நீங்கள் காப்புப்பிரதி (backup) வைத்திருந்தால், அந்த நீக்கப்பட்ட செய்திகளை மீண்டும் பெறுவது சாத்தியம்.
ஆண்ட்ராய்டில் நீக்கப்பட்ட வாட்ஸ்அப் செய்திகளை மீட்டெடுப்பது
முதலில் உங்கள் ஆண்ட்ராய்டு போனிலிருந்து வாட்ஸ்அப்பை நிறுவல் நீக்கவும்.
பின்னர் Google Play Store-இல் இருந்து மீண்டும் நிறுவவும்.
அமைப்பின் போது உங்கள் போன் எண்ணை சரிபார்க்கவும்.
வாட்ஸ்அப், உங்கள் Google Drive-இல் உள்ள காப்புப்பிரதியை தானாகவே கண்டறியும்.
அப்போது “மீட்டமை” (Restore) என்பதைக் கிளிக் செய்யவும்.
இதன்மூலம் காப்புப்பிரதியில் இருந்த அனைத்து செய்திகள் – நீக்கப்பட்டவை உட்பட – மீண்டும் உங்கள் அரட்டையில் தோன்றும்.
iPhone-இல் நீக்கப்பட்ட வாட்ஸ்அப் செய்திகளை மீட்டெடுப்பது
உங்கள் iPhone-இல் இருந்து WhatsApp-ஐ நிறுவல் நீக்கவும்.
பின்னர் App Store-இல் இருந்து மீண்டும் நிறுவவும்.
அமைப்பின் போது உங்கள் போன் எண்ணை சரிபார்க்கவும்.
iCloud-இல் சேமிக்கப்பட்டுள்ள காப்புப்பிரதியை WhatsApp கண்டறியும்.
அப்போது “அரட்டை வரலாற்றை மீட்டமை” (Restore Chat History) என்பதைக் கிளிக் செய்தால், உங்கள் பழைய அரட்டைகள் மீண்டும் தோன்றும்.
எதிர்காலத்தில் பாதுகாப்பாக இருக்க எப்படி?
மீண்டும் இதுபோன்ற சிக்கல் ஏற்படாமல் தவிர்க்க, தானியங்கி காப்புப்பிரதியை (Auto Backup) இயக்குவது மிகவும் முக்கியம்.
Android-இல் Backup எடுப்பது
WhatsApp திறக்கவும் → மேல் மூன்று புள்ளிகள் → அமைப்புகள் (Settings) → அரட்டைகள் (Chats) → அரட்டை காப்புப்பிரதி (Chat Backup)
“Google Drive-க்கு காப்புப்பிரதி எடுக்கவும்” (Back up to Google Drive) என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
தினசரி, வாராந்திரம் அல்லது மாதாந்திரம் என விரும்பிய இடைவெளியை அமைக்கவும்.
உங்கள் Google Account மற்றும் WiFi அல்லது Data விருப்பத்தையும் தேர்வு செய்யவும்.
iPhone-இல் Backup எடுப்பது
WhatsApp திறக்கவும் → Settings → Chats → Chat Backup
“Auto Backup” என்பதை இயக்கவும்.
காப்புப்பிரதி எடுக்கும் அதிர்வெண்னை (Daily/Weekly/Monthly) தேர்வு செய்யவும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|