தங்கம் போல் மிளிரும் சரும ரகசியம் - மஞ்சள் ஸ்க்ரப்!
முகம் பொலிவுடன் இருக்க முன்னோர்கள் பின்பற்றிய மஞ்சள் ரகசியம்
நிலா போன்ற பொலிவான முகத்திற்கு மஞ்சளை இப்படி பயன்படுத்துங்கள்
மஞ்சள் என்பது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்திய மற்றும் இலங்கை பாரம்பரிய அழகு முறைகளில் முக்கிய பங்கு வகித்து வந்த ஒன்று.
குழந்தைப் பருவத்திலிருந்து வயது முதிர்ந்த காலம் வரை பெண்கள் மஞ்சளைப் பயன்படுத்தி குளிப்பதால், முகத்தில் சுருக்கங்கள் இல்லாமல் எப்போதும் ஆரோக்கியமான பொலிவு பெறுவார்கள்.
இது மட்டும் அல்லாமல், மஞ்சள் உடலில் ஏற்படும் பல்வேறு தோல் பிரச்சனைகளையும் இயற்கையாக குணப்படுத்தும் திறன் கொண்டது.
இப்போது, மாசுபாடு, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்கள், மன அழுத்தம் போன்ற காரணங்களால் சருமம் வறண்டு, அதன் இயற்கையான ஒளி மற்றும் நெகிழ்வுத் தன்மை குறைந்து விடுகிறது.
இந்த நிலையை மாற்ற வீட்டிலேயே எளிதாக தயாரிக்கக்கூடிய மஞ்சள் முக ஸ்க்ரப் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
வாரத்திற்கு மூன்று முறை பயன்படுத்தினால், சருமம் எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
மஞ்சளில் உள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் முகத்தில் இருக்கும் அழுக்குகளை நீக்கி, பருக்கள் மற்றும் கரும்புள்ளிகளை தடுக்கும். இதோடு, தேங்காய் எண்ணெயின் ஈரப்பதம் தரும் தன்மை முகத்தை மென்மையாக்கும்.
முகத்தைப் பொலிவாக்கும் மஞ்சள் ஸ்க்ரப் – தேவையான பொருட்கள்
மஞ்சள் அல்லது கஸ்தூரி மஞ்சள் – 3 டீஸ்பூன்
கடலை மாவு – 5 டீஸ்பூன்
அரிசி மாவு – சிறிதளவு
தேங்காய் எண்ணெய் – 3 டீஸ்பூன்
தயிர் – சிறிதளவு
மஞ்சள் ஸ்க்ரப் தயாரிக்கும் முறை
1. ஒரு சுத்தமான கிண்ணத்தில் மஞ்சள் மற்றும் கடலை மாவை சேர்த்து நன்றாக கலக்கவும்.
2. அதனுடன் சிறிதளவு அரிசி மாவு மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலக்கவும்.
3. இந்த பேஸ்ட் ஸ்க்ரப்பை டப்பாவில் அடைத்து, ஒரு வாரம் வரை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து பயன்படுத்தலாம்.
பயன்படுத்தும் முறை
1. ஸ்க்ரப்பை தயிர் அல்லது பாலுடன் கலந்து முகத்தில் தடவவும்.
2. விரல்கள் மூலம் மெதுவாக மசாஜ் செய்யவும்.
3. பின்னர் குளிர்ந்த நீரால் கழுவிக்கொள்ளவும்.
பயன்கள்
முகத்தில் உள்ள அழுக்கு, எண்ணெய் மற்றும் இறந்த செல்களை நீக்கும்
பருக்கள் மற்றும் கரும்புள்ளிகளை தடுக்கும்
தோல் தொற்று ஏற்படும் வாய்ப்பை குறைக்கும்
சருமத்திற்கு இயற்கையான பொலிவை தரும்