Home>விளையாட்டு>இன்று இந்தியா-ஆஸ்திர...
விளையாட்டு (கிரிக்கெட்)

இன்று இந்தியா-ஆஸ்திரேலியா அரையிறுதி மோதல்

byKirthiga|9 days ago
இன்று இந்தியா-ஆஸ்திரேலியா அரையிறுதி மோதல்

மகளிர் உலகக்கோப்பை அரையிறுதி: இன்று இந்தியா vs ஆஸ்திரேலியா மோதல்!

மகளிர் உலகக்கோப்பை அரையிறுதியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது

ICC மகளிர் உலகக்கோப்பை 2025 தொடரின் அரையிறுதியில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன.

நவி மும்பையில் உள்ள டி.ஒய். படீல் ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்த முக்கியமான போட்டி இன்று பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

தாயகத்தில் நடைபெறும் இந்த அரையிறுதி போட்டி குறித்து ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர். இரு அணிகளும் இதுவரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளன.

இதற்குமுன் நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி இங்கிலாந்தை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி தென்னாப்பிரிக்காவுடன் இறுதிப்போட்டியில் மோதும்.


செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்