Home>சினிமா>இளையராஜா 50 ஆண்டுகள்...
சினிமா

இளையராஜா 50 ஆண்டுகள் – ரஜினிகாந்த் உருக்கமான புகழாரம்

byKirthiga|about 2 months ago
இளையராஜா 50 ஆண்டுகள் – ரஜினிகாந்த் உருக்கமான புகழாரம்

இளையராஜா பொன்விழா: ரஜினிகாந்த் “அவர் சாமி” என உருக்கம்

சிம்பொனி 50 – இசைஞானி இளையராஜாவுக்கு தமிழக அரசு பாராட்டு விழா

திரை இசை உலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்ததையொட்டி, இசைஞானி இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா இன்று (14) சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில்盛கமாக நடைபெற்றது.

‘சிம்பொனி – சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளையராஜா – பொன்விழா ஆண்டு 50’ என்ற தலைப்பில் நடந்த இவ்விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள், திரைத்துறை பிரபலங்கள், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

Selected image


இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் உரையாற்றியபோது,

“நான் அதிசய மனிதர்களை இதிகாசங்களிலும், புராணங்களிலும் மட்டுமே படித்திருக்கிறேன். ஆனால், என் கண்களால் பார்த்த அதிசய மனிதர் இளையராஜாதான். நம் உலகம் ஒன்று, ராஜாவின் உலகம் வேறு. இன்னும் இன்றைக்கும் அவருடைய பாடல்கள் சினிமாவில் இடம் பெற்றால் சூப்பர்ஹிட் ஆகின்றன. எத்தனை இழப்புகளை சந்தித்தாலும், ராஜாவிடம் சலனம் இல்லை. ராகங்களை அள்ளிக்கொடுக்கும் அவர் உண்மையில் சாமி. உலகெங்கும் வாழும் தமிழர்களின் நாடி, ரத்தம், உயிர் ராஜா. அவருடனான நட்பு எனக்கு பெரும் பாக்கியம்,” என உருக்கமாகக் கூறினார்.