இந்தியா 102 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
மந்தனாவின் சதத்தால் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய பெண்கள்
ஒருநாள் தொடரை 1-1 என சமனில் நிறுத்திய இந்திய மகளிர் அணி
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் 2வது ஆட்டத்தில் அபாரமாக விளையாடி, ஆஸ்திரேலியாவை 102 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 49.5 ஓவர்களில் 292 ரன்கள் எடுத்தது.
இந்திய அணியின் துடுப்பாட்டத்தில் ஸ்மிருதி மந்தனா 117 ரன்களுடன் சதம் அடித்து பிரகாசித்தார். ஆஸ்திரேலியா பந்துவீச்சாளர்களில் டார்சி பிரவுன் 3 விக்கெட் எடுத்தார்.
293 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா, இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை விரைவில் இழந்தது.
அன்னாபெல் சதர்லேண்ட் மட்டும் 45 ரன்கள் எடுத்தார். பிற வீராங்கனைகள் பெரிதாக விளையாடாததால், ஆஸ்திரேலிய அணி 40.5 ஓவர்களில் 190 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
இந்தியா சார்பில் கிராந்தி கவுட் 3 விக்கெட்டும், தீப்தி சர்மா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்த வெற்றியால் 3 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 1-1 என சமன் செய்துள்ளது. இறுதிப் போட்டி தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் முக்கிய ஆட்டமாக அமைய உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|