இலங்கை பிரதமரை வரவேற்ற இந்திய பிரதமர் - நடந்தது என்ன?
இருநாட்டு உறவுகள், கல்வி, பெண்கள் அதிகாரமளிப்பு குறித்து பேச்சுவார்த்தை
இந்தியப் பயணத்தில் இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியாவை வரவேற்ற நரேந்திர மோடி
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியாவை இந்தியா வருகைத் தந்ததற்காக வரவேற்று, இரு நாடுகளுக்கிடையிலான பல்துறை ஒத்துழைப்புகள் குறித்து விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.
எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள நரேந்திர மோடி, “இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியாவை வரவேற்கும் மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள் கலந்துரையாடல்கள் கல்வி, பெண்கள் அதிகாரமளிப்பு, புதுமை, அபிவிருத்தி ஒத்துழைப்பு மற்றும் மீனவர்களின் நலன்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை உள்ளடக்கியதாக இருந்தது,” என தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தியா மற்றும் இலங்கை நெருக்கமான அண்டை நாடுகளாக இருப்பதால், இரு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பு, இரு மக்களும் பகிர்ந்து கொள்ளும் நலன்களுக்கும் பிராந்திய முன்னேற்றத்திற்கும் முக்கிய பங்காற்றும் என அவர் வலியுறுத்தினார்.
Glad to welcome Prime Minister of Sri Lanka, Ms. Harini Amarasuriya. Our discussions covered a broad range of areas, including education, women's empowerment, innovation, development cooperation and welfare of our fishermen. As close neighbours, our cooperation holds immense… pic.twitter.com/5ARYRVl5Ts
— Narendra Modi (@narendramodi) October 17, 2025
இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியா, அக்டோபர் 16 முதல் 18 வரை இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ பயணமாக வருகை தந்துள்ளார். பிரதமராக பொறுப்பேற்ற பின் இது அவரின் முதல் இந்தியப் பயணம் ஆகும்.
அவரது பயணத்தின் போது இந்திய அரசியல் தலைவர்களுடன் சந்தித்து, இருதரப்பு உறவுகள் மற்றும் பரஸ்பர நலன்கள் குறித்த விவகாரங்களைப் பற்றி கலந்துரையாடவுள்ளார். மேலும், இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக, நியூடெல்லியில் நடைபெறும் NDTV World Summit நிகழ்வில் முக்கிய உரையாற்ற உள்ளார். இந்நிகழ்ச்சி NDTV மற்றும் சிந்தன் ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து நடத்துகின்றன.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|