இலங்கை
இந்திய விசா தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!
byKirthiga|10 days ago
நவம்பர் 3 முதல் விசா சேவைகள் தூதரகத்திடம் பெறலாம்
இந்திய விசா, பாஸ்போர்ட் சேவைகள் இனி நேரடியாக தூதரகத்தால் வழங்கப்படும்
இந்திய விசா, பாஸ்போர்ட் மற்றும் தூதரக தொடர்பான அனைத்து சேவைகளும் இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம், கண்டி துணை உயர்ஸ்தானிகராலயம் மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய பொதுத் தூதரகம் ஆகியவற்றால் நவம்பர் 3, 2025 முதல் நேரடியாக நிர்வகிக்கப்படவுள்ளது.
இந்த தகவலை வெளியிட்டுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம், தற்போது விசா தொடர்பான சேவைகளை மேற்கொண்டு வரும் சேவை வழங்குநரின் ஒப்பந்தம் அக்டோபர் 31, 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும் என அறிவித்துள்ளது.
இதன்படி, வரும் திங்கட்கிழமை (நவம்பர் 3) முதல் அனைத்து விசா, பாஸ்போர்ட் மற்றும் தூதரக சேவைகளும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் மூலமாகவே நேரடியாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|