Home>உலகம்>இந்தோனேஷியா பள்ளி சர...
உலகம்

இந்தோனேஷியா பள்ளி சரிவு – 59 பேர் காணாமல் போனனர்

byKirthiga|about 1 month ago
இந்தோனேஷியா பள்ளி சரிவு – 59 பேர் காணாமல் போனனர்

ஜாவா பள்ளி இடிபாடு: உயிர் அடையாளமின்றி 59 பேர் காணாமல் போன நிலை

இந்தோனேஷியா பள்ளி சரிவு: 59 பேர் காணாமல் போன நிலையில் உயிர் அடையாளங்கள் இல்லை

இந்தோனேஷியாவின் கிழக்கு ஜாவா மாநிலத்தில் நிகழ்ந்த பள்ளி சரிவு விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. ஆனால் புதன்கிழமை (அக்டோபர் 2) அதிகாரிகள் தெரிவித்ததாவது, இடிபாடுகளுக்குள் உயிருள்ளவர்களின் அடையாளம் எதுவும் இனி இல்லை என்றார்கள்.

சிடோஅர்ஜோ நகரில் உள்ள அல்-கோஜினி பள்ளி திங்கள்கிழமை சரிந்தது. மேல்தள கட்டுமானப் பணிகளை அந்தக் கட்டிடத்தின் அடித்தளம் தாங்க முடியாததால் பள்ளி இடிந்து விழுந்தது. அச்சமயம் தொழுகையில் இருந்த மாணவர்கள் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கினர்.

இந்தோனேஷிய தேசிய பேரிடர் மேலாண்மை மையத் தலைவர் சுஹரியாண்டோ கூறுகையில், “வெப்பத்தை உணரும் டிரோன் போன்ற நவீன தொழில்நுட்ப உபகரணங்களை பயன்படுத்தியபோதும், எந்த உயிரின் அடையாளமும் இல்லை என்பது அறிவியல் ரீதியாக உறுதி செய்யப்பட்டுள்ளது” என்றார்.

இதுவரை ஐந்து பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இருப்பினும், பள்ளியின் வருகைப் பதிவுகள் மற்றும் காணாமல் போனவர்களின் குடும்பங்களின் புகார்கள் அடிப்படையில் மொத்தம் 59 பேர் இன்னும் சிக்கியிருப்பதாக பேரிடர் மேலாண்மை முகமை பேச்சாளர் அப்துல் முஹாரி தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் பெயர்களை மீட்புக்குழு கூப்பிட்டு பார்த்தபோதும் பதில் எதுவும் வரவில்லை. அதேபோல் இயக்கம் அல்லது உயிர்ச் சுவாச அடையாளங்களை கண்டறிய ஸ்கேனர் மற்றும் மோஷன் டிடெக்டர் போன்ற கருவிகள் பயன்படுத்தப்பட்டும் எதுவும் கிடைக்கவில்லை என தேடுதல் மற்றும் மீட்பு அதிகாரி எமி ஃப்ரீசர் தெரிவித்துள்ளார்.

மீட்புப்பணியாளர்கள் குறுகிய சுரங்கங்களில் ஊர்ந்து சென்று சிக்கியவர்களை தேடும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். க்ரேன் இயந்திரம் கொண்டு இடிபாடுகளை தூக்கும் பணியும் நடத்தப்படுகிறது.

அல்-கோஜினி பள்ளி ஒரு இஸ்லாமிய “பெசன்த்ரென்” எனப்படும் மதப் பள்ளியாகும். இந்தோனேஷியாவில் மொத்தம் 42,000 பெசன்த்ரென் பள்ளிகள் உள்ளன. அங்கு ஏழு மில்லியனுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கின்றனர் என்று மத விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இடிபாடுகள் அருகே தங்கள் குழந்தைகளின் பெயர்களைத் தேடி கவலையுடன் நிற்கும் பெற்றோர்களில் ஒருவரான அக்மத் இக்சான் (52) கூறுகையில், “என் 14 வயது மகன் அரிஃப் அஃபந்தி இன்னும் உயிருடன் இருக்கிறான் என்று நான் நம்புகிறேன். இதுவரை அவனைப்பற்றி எதுவும் தெரியவில்லை” என்று துயரத்துடன் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்