3 பில்லியனை கடந்த பயனர்கள் - Meta CEO
மார்க் சக்கர்பெர்க்: இன்ஸ்டாகிராம் மாதாந்திர பயனர்கள் 3 பில்லியன் கடந்தது
ரீல்ஸ் அம்சம் வெற்றியின் முக்கிய காரணம் – இன்ஸ்டாகிராம் புதிய சாதனை
மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனத்தின் CEO மார்க் சக்கர்பெர்க், உலகின் மிகப் பிரபலமான சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராம் மாதாந்திர செயலில் இருக்கும் பயனர்கள் (Monthly Active Users) 3 பில்லியன் ஆகியுள்ளதாக புதன்கிழமை அறிவித்தார். இது அந்த ஆப்பின் வரலாற்றில் குறிப்பிடத்தக்க முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது.
மெட்டா கடைசியாக 2022 ஆம் ஆண்டு பயனர் எண்ணிக்கையை வெளிப்படுத்தியபோது, இன்ஸ்டாகிராம் 2 பில்லியன் பயனர்களை எட்டியதாக சக்கர்பெர்க் தெரிவித்திருந்தார்.
2012 ஆம் ஆண்டு, புகைப்பட பகிர்வு செயலி மட்டுமே ஆக இருந்த இன்ஸ்டாகிராமை, அப்போது பெரிதாக வருமானம் ஈட்டாத நிலையிலேயே, மெட்டா (அப்போதைய பேஸ்புக்) 1 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் கைப்பற்றியது. அந்த முடிவை அப்போது பலர் சந்தேகத்துடன் பார்த்தனர். ஆனால் அதன் பின், ஆப் அதிவேக வளர்ச்சி பெற்று, இன்று மெட்டாவின் அமெரிக்க விளம்பர வருவாயின் பாதியை விட அதிக பங்கினை உருவாக்கும் என மதிப்பிடப்படுகிறது.
இன்ஸ்டாகிராமின் வேகமான வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக 2020 ஆம் ஆண்டு அறிமுகமான "ரீல்ஸ்" அம்சம் குறிப்பிடப்படுகிறது. இது குறும்படங்களின் சந்தையில், டிக்-டாக் மற்றும் கூகுள் நிறுவனத்தின் யூடியூப் ஷார்ட்ஸ் ஆகியவற்றுடன் கடுமையான போட்டியில் ஈடுபட்டுள்ளது.
சீன தொழில்நுட்ப மாபெரும் நிறுவனமான பைடான்ஸ்-க்கு சொந்தமான டிக்-டாக், உலகளவில் 1 பில்லியனுக்கும் மேற்பட்ட மாதாந்திர பயனர்களை பெற்றுள்ளது என அந்த நிறுவனம் சமீபத்தில் அறிவித்தது.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|