Home>இந்தியா>ரூ.4.6 லட்சம் விலையி...
இந்தியா

ரூ.4.6 லட்சம் விலையில் ஆடை - ஈஷா அம்பானியின் பிறந்தநாள்

byKirthiga|8 days ago
ரூ.4.6 லட்சம் விலையில் ஆடை - ஈஷா அம்பானியின் பிறந்தநாள்

இஷா அம்பானி பிறந்தநாள் கொண்டாட்டம் – ரூ.4.6 இலட்சம் மதிப்புள்ள உடை!

ஜம்நகரில் பிறந்தநாளைக் கொண்டாடிய இஷா அம்பானி – செம்மை சீக்வின் உடை கவனம் பெற்றது

முகேஷ் அம்பானியின் மகளும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான இஷா அம்பானி, சமீபத்தில் குஜராத்தின் ஜாம்நகரில் தன் பிறந்தநாளை பிரம்மாண்டமாகக் கொண்டாடினார்.

இவ்விழா அவரது இரட்டையர் சகோதரர் ஆகாஷ் அம்பானியின் பிறந்தநாளையும் இணைத்தே நடைபெற்றது. குடும்பத்தினரும் நெருங்கிய நண்பர்களும் கலந்து கொண்ட தனியார் நிகழ்ச்சியில், அன்பும் மகிழ்ச்சியும் நிறைந்த சூழல் காணப்பட்டது.

இவ்விழாவின் முக்கிய சிறப்பாக ஜம்நகர் வானத்தை ஒளிரவைத்த அற்புதமான ட்ரோன் நிகழ்ச்சி இடம்பெற்றது. இரவு முழுவதும் பளிச்சென ஒளிர்ந்த அந்த நிகழ்ச்சி, அனைவரின் நினைவிலும் நீங்கா இடத்தைப் பெற்றுள்ளது.

Selected image


இஷா அம்பானி தனது பிறந்தநாளில் Venyx by Saloni என்ற பிராண்டின் செம்மை நிற சீக்வின் உடையை அணிந்திருந்தார். “Camille Crop Top” மற்றும் அதனுடன் பொருந்திய “Aidan Skirt” ஆகியவை முறையே ரூ. 38,994 (இந்திய ரூபாய்) மற்றும் ரூ. 95,201 (இந்திய ரூபாய்) என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

மொத்த மதிப்பு இந்திய ரூபாய் ரூ. 1,34,195 ஆகும். அதாவது இலங்கை ரூபாயில் சுமார் ரூ.4,66,000 (4.66 இலட்சம்) ஆகும்.

பளபளப்பான அந்த செம்மை உடை, பிறந்தநாள் கொண்டாட்டத்தின் மகிழ்ச்சியையும், இஷாவின் மெருகூட்டப்பட்ட பாணியையும் முழுமையாக பிரதிபலித்தது. வைர காதணிகள், ஸ்டேட்மென்ட் ரிங் மற்றும் செம்மை நிற ஹீல்ஸ் அணிந்திருந்தார்.

ஜம்நகரில் நடந்த இஷா அம்பானி மற்றும் ஆனந்த் பீரமலின் இந்த ஸ்டைலிஷ் கொண்டாட்டம், குடும்பம், ஃபேஷன் மற்றும் கொண்டாட்டம் என மூன்றையும் ஒருங்கிணைத்த மறக்கமுடியாத இரவாக அமைந்துள்ளது.


View this post on Instagram

A post shared by Ambani Family (@ambani_update)

செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்