உலகம்
இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு: “பலஸ்தீன் நாடு உருவாகாது”
byKirthiga|about 1 month ago
மேற்கத்திய அங்கீகாரத்துக்கு நேதன்யாகு கடும் எதிர்ப்பு
ஐ.நா.வில் பல நாடுகள் பலஸ்தீனை அங்கீகரித்தன
சில மேற்கத்திய நாடுகள் பலஸ்தீனுக்கு நாட்டுத் தன்மையை அங்கீகரித்திருப்பது, இஸ்ரேலுக்கு எந்த வகையிலும் கட்டுப்பாடாகாது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு புதன்கிழமை தெரிவித்தார்.
“பலஸ்தீன் நாடு உருவாகாது,” என்று பிரதமரின் அலுவலகம் சமூக ஊடக தளமான X-இல் பதிவு செய்தது.
கடந்த திங்கள்கிழமை, ஐக்கிய நாடுகள் சபையில் உலகின் பல நாடுகளின் தலைவர்கள் கூடினர். அப்போது, காசா போருக்கு இரண்டு ஆண்டுகள் நெருங்கும் நிலையில், பலஸ்தீனுக்கு நாட்டுத் தன்மையை வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை ஏற்றுக்கொண்டனர். எனினும், இஸ்ரேல் மற்றும் அதன் நெருங்கிய கூட்டாளியான அமெரிக்கா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|