யேமனில் இஸ்ரேல் விமானத் தாக்குதல்: 9 பேர் உயிரிழப்பு
ஹூத்திகள்: பொதுமக்கள் அதிகம் பாதிப்பு, வீடுகள் சேதம்
யேமனில் இஸ்ரேல் விமானத் தாக்குதல் – 9 பேர் பலி, 100-க்கும் மேற்பட்டோர் காயம்
யேமனில் இஸ்ரேல் புதன்கிழமை நடத்திய விமானத் தாக்குதலில் குறைந்தது 9 பேர் உயிரிழந்ததுடன், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக ஹூத்தி இயக்கம் தெரிவித்துள்ளது.
ஹூத்திகள் கட்டுப்பாட்டில் உள்ள சுகாதார ஆணையம் இதனை உறுதிப்படுத்தி, இது ஆரம்பக்கட்ட உயிரிழப்பு மற்றும் காயமடைந்தோரின் எண்ணிக்கை மட்டுமே என தெரிவித்துள்ளது.
தாக்குதல்கள் தலைநகர் சனா மற்றும் அல்-ஜவ்ஃப் மாகாணத்தில் நடத்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
தலைநகர் சனாவில் தாக்குதல்கள் அதிக சேதத்தை ஏற்படுத்தியதாக அங்குள்ள குடியிருப்பவர்கள் கூறினர்.
குறிப்பாக, மக்கள் அதிகமாக வசிக்கும் அல்-தஹ்ரிர் பகுதியில் அமைந்திருந்த பாதுகாப்பு அமைச்சகத்தின் "மோரல் கைடன்ஸ்" தலைமையகம் குறிவைக்கப்பட்டதாகவும், வெடிப்பின் தாக்கத்தில் பல பழைய வீடுகள் சேதமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தாக்குதல் குறித்து ஹூத்தி அதிகாரிகள், பொதுமக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் உயரும் அபாயம் உள்ளதாகவும் எச்சரித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|