Home>அரசியல்>யாழ்ப்பாண மாவட்ட பார...
அரசியல்இலங்கை

யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கைது

byKirthiga|about 1 month ago
யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கைது

பொலிஸ் கடமை தடை செய்த குற்றச்சாட்டு

யாழ்ப்பாண எம்.பி டாக்டர் ராமநாதன் அர்ச்சுனா கைது

யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராமநாதன் ஆர்ச்சுனா இன்று (29) காலை கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் பதிவு செய்ய வருகை தந்தபோது, அவரை கோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சமீபத்தில் கொழும்பில் நடத்தப்பட்ட சத்யாகிரக போராட்டத்தின் போது, கோட்டை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றியிருந்த பொலிஸ் அதிகாரியுடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

அதனை அடுத்து, பொலிஸ் கடமையினை தடை செய்த குற்றச்சாட்டின் பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், இன்று காலை அவர் பொலிஸ் நிலையம் வந்தபோது அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர்.