Home>இலங்கை>யாழ்ப்பாணம் உலகின் ச...
இலங்கைசுற்றுலா

யாழ்ப்பாணம் உலகின் சிறந்த சுற்றுலா இடங்களில் ஒன்று

byKirthiga|12 days ago
யாழ்ப்பாணம் உலகின் சிறந்த சுற்றுலா இடங்களில் ஒன்று

சிறந்த 25 சுற்றுலா தலங்களில் யாழ்ப்பாணம் இணைந்தது

இலங்கையின் வடபகுதி யாழ்ப்பாணம் – உலகின் சிறந்த சுற்றுலா தளங்களில் பெருமை பெற்றது

உலகப் புகழ்பெற்ற பயண இதழான Lonely Planet வெளியிட்ட 2026 ஆம் ஆண்டுக்கான “Best in Travel” பட்டியலில் யாழ்ப்பாணம் (Jaffna) உலகின் சிறந்த 25 சுற்றுலா இடங்களில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

சமீப ஆண்டுகளில் யாழ்ப்பாணம் இலங்கையின் முக்கியமான கலாச்சார மற்றும் வரலாற்று சுற்றுலா தலமாக திகழ்ந்து, ஆயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பயணிகளின் வருகையை ஈர்த்துள்ளது. இந்த தெரிவு, இலங்கையின் செழுமையான பாரம்பரியமும், பண்பாட்டு வளங்களும் மீண்டும் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெறுவதற்கான முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.

Lonely Planet தனது 2026 ஆண்டு பதிப்பில் “எங்கு செல்லலாம், என்ன செய்யலாம்” எனும் வழிகாட்டுதலுடன் உலகம் முழுவதிலும் இருந்து 25 முக்கிய இடங்களையும், 25 தனிப்பட்ட அனுபவங்களையும் பரிந்துரைத்துள்ளது. இந்த புத்தகத்தில் வண்ணமயமான புகைப்படங்கள், பயணக் கட்டுரைகள் மற்றும் ஒவ்வொரு இடத்திற்குமான உள்ளூர் வழிகாட்டுதல்களும் இடம்பெற்றுள்ளன.

1970 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட Lonely Planet, உலகம் முழுவதும் 150 மில்லியனுக்கும் மேற்பட்ட வழிகாட்டி புத்தகங்களை விற்று, மிகவும் நம்பிக்கைக்குரிய பயண ஊடக பிராண்டாக திகழ்கிறது.

2026 ஆம் ஆண்டில் Lonely Planet பரிந்துரைத்த உலகின் சிறந்த 25 சுற்றுலா இடங்கள்:

  1. பெரு (Peru)

  2. யாழ்ப்பாணம், இலங்கை (Jaffna, Sri Lanka)

  3. மேன், அமெரிக்கா (Maine, USA)

  4. காடிஸ், ஸ்பெயின் (Cádiz, Spain)

  5. ரியூனியன், ஆப்ரிக்கா (Réunion, Africa)

  6. போட்ச்வானா, ஆப்ரிக்கா (Botswana, Africa)

  7. கார்டஜீனா, கொலம்பியா (Cartagena, Colombia)

  8. பின்லாந்து (Finland, Europe)

  9. டிப்பரேரி, அயர்லாந்து (Tipperary, Ireland)

  10. மெக்சிகோ சிட்டி (Mexico City)

  11. குவெட்சால்டெனாங்கோ, குவாத்தமாலா (Quetzaltenango, Guatemala)

  12. பிரிட்டிஷ் கொலம்பியா, கனடா (British Columbia, Canada)

  13. சர்டினியா, இத்தாலி (Sardinia, Italy)

  14. லிபெர்டேடே, சாவோ பாவ்லோ (Liberdade, São Paulo)

  15. யுட்ரெக்ட், நெதர்லாந்து (Utrecht, Netherlands)

  16. பார்படோஸ், கரீபியன் (Barbados, Caribbean)

  17. ஜெஜூ-டோ, தென் கொரியா (Jeju-Do, South Korea)

  18. நார்த் ஐலண்ட், நியூசிலாந்து (North Island, New Zealand)

  19. தியோடோர் ரூஸ்வெல்ட் தேசிய பூங்கா, நார்த் டகோட்டா (Theodore Roosevelt National Park, North Dakota)

  20. குய் நியோன், வியட்நாம் (Quy Nhon, Vietnam)

  21. சிஎம் ரீப், கம்போடியா (Siem Reap, Cambodia)

  22. பூக்கெட், தாய்லாந்து (Phuket, Thailand)

  23. இக்கிரா-பிளிண்டர்ஸ் ரேன்ஜஸ், ஆஸ்திரேலியா (Ikra-Flinders Ranges, South Australia)

  24. துனிசியா, ஆப்ரிக்கா (Tunisia, Africa)

  25. சாலமன் தீவுகள், ஓசியானியா (Solomon Islands, Oceania)



செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்