Home>சினிமா>ஜாய் கிரிஸில்டாவுக்க...
சினிமா

ஜாய் கிரிஸில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது

byKirthiga|8 days ago
ஜாய் கிரிஸில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது

மாதம்பட்டி ரங்கராஜ் விவகாரம் மீண்டும் சமூக வலைதளங்களில் பேச்சு!

மாதம்பட்டி ரங்கராஜ் - ஜாய் கிரிஸில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது

பிரபல சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ், 2019 ஆம் ஆண்டு வெளிவந்த மெஹந்தி சர்க்கஸ் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். ரங்கராஜ் ஏற்கனவே ஸ்ருதி என்பவரை திருமணம் செய்து கொண்டு, இரு குழந்தைகளுக்கு தந்தையாக உள்ளார்.

பின்னர், ஜாய் கிரிஸில்டாவுடன் இரண்டாவது திருமணம் செய்ததாக சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் பரவியதால் பெரும் சர்ச்சை எழுந்தது.



ஆனால் ரங்கராஜ் இந்த தகவலை மறுத்தார். இதனால், தன்னை ஏமாற்றியதாக கூறி ஜாய் கிரிஸில்டா சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். மேலும், அவரால் பல முறை கருவுற்று, ரங்கராஜின் வற்புறுத்தலால் கருக்கலைப்பும் செய்ததாகவும் குற்றம்சாட்டினார்.

அதையடுத்து, ஜாய் கிரிஸில்டா சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, மாதம் ரூ.6,50,000 பராமரிப்பு தொகையை வழங்குமாறு கோரிக்கை வைத்திருந்தார்.

இந்நிலையில், சமீபத்தில் ஜாய் கிரிஸில்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் தன்னுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்துள்ளார். இதனால் சமூக வலைதளங்களில் இந்த விவகாரம் மீண்டும் கவனத்தை பெற்றுள்ளது.

Selected image


செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்