மாதம்பட்டி ரங்கராஜ் பெயருடன் ஜாய் கிரிசில்டா பதிவு
தந்தை பெயர் இடத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் - பிறப்பு சான்றிதழ் வைரல்
தந்தை பெயருடன் மகனின் பிறப்பு சான்றிதழை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா – வைரலாகும் பதிவு
பிரபல ஆடை வடிவமைப்பாளரும், மாதம்பட்டி ரங்கராஜ் மீது புகார் அளித்திருந்த ஜாய் கிரிசில்டா, தனது மகனின் பிறப்பு சான்றிதழை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த சான்றிதழில் தந்தை பெயர் பகுதியில் “மாதம்பட்டி ரங்கராஜ்” என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை வெளியிட்டு, “சில பொறுப்புகள் வலிக்காக வழங்கப்படுகின்றன, பெருமைக்காக அல்ல” எனும் குறிப்பையும் அவர் இணைத்துள்ளார்.
மாதம்பட்டி ரங்கராஜ் என்ற பெயர் கேட்டாலே விஐபிகள் முதல் சினிமா நட்சத்திரங்கள் வரை அனைவருக்கும் பரிச்சயம். கேட்டரிங் சேவைகள் மூலம் பிரபலமான இவர், ‘மெஹந்தி சர்க்கஸ்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்ததுடன், ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியிலும் பங்கேற்றவர்.
ரங்கராஜ் தனது மனைவி ஸ்ருதியுடன் வாழ்ந்து வருகிறார்; இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதேவேளை, கடந்த ஆண்டு பிரபல டிசைனர் ஜாய் கிரிசில்டா, தன்னை ரங்கராஜ் திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாக குற்றச்சாட்டு முன்வைத்து காவல்துறையில் புகார் அளித்திருந்தார். 2023ஆம் ஆண்டில் தங்களது திருமணம் நடைபெற்றதாகவும் அதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து, அவர் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, தன்னுடைய கர்ப்பகால பராமரிப்பு மற்றும் மருத்துவச் செலவுகளுக்காக மாதம் ரூ.6,50,000 வழங்க ரங்கராஜ் மீது உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.
கடந்த அக்டோபர் 31ஆம் தேதி ஜாய் கிரிசில்டா ஆண் குழந்தைக்கு தாயாகியுள்ளார். அதன்பின், “ஜூனியர் மாதம்பட்டி ரங்கராஜ் – அப்பாவின் முகத்தையே உரித்துக் கொண்டிருக்கிறார்” என எழுதி குழந்தையின் புகைப்படத்தையும் சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார்.
இப்போது, குழந்தையின் பிறப்பு சான்றிதழை வெளிப்படுத்தியுள்ள அவரது பதிவு, இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|