Home>உலகம்>பிலிப்பைன்ஸ் கல்மேகி...
உலகம்

பிலிப்பைன்ஸ் கல்மேகி புயல் – 58 பேர் உயிரிழப்பு

byKirthiga|3 days ago
பிலிப்பைன்ஸ் கல்மேகி புயல் – 58 பேர் உயிரிழப்பு

வீடுகள் இடிந்து சிதைந்தன, நூற்றுக்கணக்கானோர் வெளியேற்றம்

பிலிப்பைன்ஸை தாக்கிய கல்மேகி புயல் – 58 பேர் பலி!

பிலிப்பைன்ஸை தாக்கிய கல்மேகி புயல் கொந்தளிப்பால் குறைந்தது 58 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய பிலிப்பைன்ஸில் பெரும் அழிவை ஏற்படுத்திய புயல், தற்போது பலவீனமடைந்திருந்தாலும் புதன்கிழமை பாலாவான் தீவை தாக்கி தெற்கு சீனக் கடலை நோக்கி நகர்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்களில் ஆறு பேர் இராணுவ வீரர்கள் ஆவர். மிந்தனாவோ தீவில் உள்ள அகுசான் டெல் சூரில் மனிதாபிமான பணியில் ஈடுபட்டிருந்தபோது, அவர்களின் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.

சிபு மாகாணம், முக்கிய சுற்றுலா மையமாக விளங்கும் இடம், வெள்ளம் குறைந்தபின் முழுமையாக சேதமடைந்த வீடுகள், புரண்ட வாகனங்கள் மற்றும் சிதறிய கட்டிட இடிபாடுகள் ஆகியவை வெளிப்பட்டன. 13 பேர் இன்னும் காணாமல் போயுள்ளதாக பேரிடர் மேலாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் வடக்கு சிபுவில் ஏற்பட்ட 6.9 ரிக்டர் நிலநடுக்கத்தால் பலர் உயிரிழந்த நிலையில், அதற்கு ஓராண்டிற்குள் மீண்டும் புயல் தாக்குதல் மக்கள் மனதில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாநில வானிலை துறை (PAGASA) வெளியிட்ட சமீபத்திய அறிவிப்பில், கல்மேகி புயல் தற்போது பலவீனமடைந்திருந்தாலும், தெற்கு சீனக் கடலில் மீண்டும் வலுவடைய வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது.

இந்த புயலால் விஸயாஸ் பிராந்தியத்தில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர். தெற்கு லூசான் மற்றும் வடக்கு மிந்தனாவோ பகுதிகளிலும் பல வீடுகள் நீரில் மூழ்கி மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் காற்றுடன், 165 கிலோமீட்டர் வேகத்தில் புயல் காற்று வீசியது. இது இந்த ஆண்டில் பிலிப்பைன்ஸை தாக்கிய 20வது புயலாகும். தற்போது கல்மேகி வியட்நாமை நோக்கி நகர்கிறது. அங்கு வெள்ளிக்கிழமை கரையை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல் கடந்த செப்டம்பரில் ரகாசா சூப்பர் புயல் வட லூசான் பகுதியை தாக்கி பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் மூடப்பட்டன. இப்போது கல்மேகி புயல் தாக்கம் அந்த நாட்டின் மக்கள் மீண்டும் பேரிடர் நிலைக்கு தள்ளியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்