Home>குற்றம்>கரந்தெனியாவி்ல் தாய்...
குற்றம்

கரந்தெனியாவி்ல் தாய்-மகன் கொலை – சந்தேக நபர் அடையாளம்

byKirthiga|about 2 months ago
கரந்தெனியாவி்ல் தாய்-மகன் கொலை – சந்தேக நபர் அடையாளம்

43 வயது சந்தேக நபர் அடையாளம்....

கரந்தெனியாவி்ல் 74 வயது தாய், 25 வயது மகன் கொலை – காரணம் இன்னும் தெரியவில்லை

கரந்தெனியாவி்ல் 74 வயதுடைய தாய் மற்றும் 25 வயதுடைய மகன் கூர்மையான ஆயுதம் மூலம் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கரந்தெனியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கபுலகொட பகுதியில் நேற்று மாலை (11) இடம்பெற்ற இந்த தாக்குதலில், கரந்தேனியாவின் கோட்டாவெல பகுதியில் வசித்து வந்த தாய் மற்றும் மகன் உயிரிழந்தனர்.

இருவரின் உடல்களும் தற்போது எல்பிட்டிய வைத்தியசாலையின் மடகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

இந்தக் கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய 43 வயதுடைய சந்தேக நபர் ஒருவர், பாதிக்கப்பட்டவர்களின் வீட்டிற்கு அருகில் வசித்து வந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஆயினும், கொலையின் காரணம் இதுவரை வெளிச்சத்திற்கு வரவில்லை என்று பொலிஸார் கூறியுள்ளனர்.

சந்தேக நபரை கைது செய்ய கரந்தேனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்