விளையாட்டு (கிரிக்கெட்)
2025 லங்கா பிரீமியர் லீக் ரத்து
byKirthiga|17 days ago
இவ்வாண்டு நடைபெற இருந்த LPL கிரிக்கெட் தொடரை ரத்து செய்தது SLC
இந்தாண்டு லங்கா பிரீமியர் லீக் நடைபெறாது – இலங்கை கிரிக்கெட் அறிவிப்பு
இலங்கை கிரிக்கெட் (SLC) நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பின்படி, இந்தாண்டு நடத்தப்படவிருந்த லங்கா பிரீமியர் லீக் (LPL) 2025 கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளது.
முதலில் திட்டமிடப்பட்டபடி இவ்வாண்டு நடைபெற இருந்தாலும், ஏற்பாடுகள் மற்றும் பிற காரணங்களால் தொடரை நடத்த முடியாது என இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
இதனால், ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த ஐந்தாவது பதிப்பு LPL தொடர் அடுத்த அறிவிப்பு வரும் வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் குழு, புதிய திகதிகள் மற்றும் அடுத்தடுத்த திட்டங்கள் குறித்து பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|