Home>உலகம்>டிரம்ப் விருந்தில் ப...
உலகம்

டிரம்ப் விருந்தில் பங்கேற்ற இலங்கை ஜனாதிபதி

byKirthiga|about 1 month ago
டிரம்ப் விருந்தில் பங்கேற்ற இலங்கை ஜனாதிபதி

நியூயார்க் விருந்தில் டிரம்ப் – அனுர குமார நட்புறவு உரையாடல்

டொனால்ட் டிரம்ப் நடத்திய விருந்தில் கலந்து கொண்ட இலங்கை அதிபர் அனுர குமார

இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்க, அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அவர்களால் நடத்தப்பட்ட சிறப்பு விருந்தில் கலந்து கொண்டார்.

செப்டம்பர் 23 ஆம் திகதி நியூயார்க் நகரிலுள்ள Lotte New York Palace Hotel–இல் நடைபெற்ற இவ்விருந்தில், ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 80ஆம் அமர்வில் பங்கேற்பதற்காக நியூயார்க் வந்திருந்த பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர் என்று அதிபர் திசாநாயக்க தனது X (முன்னர் ட்விட்டர்) பதிவில் தெரிவித்துள்ளார்.

இவ்வாய்ப்பில், அதிபர் திசாநாயக்க அவர்கள் அதிபர் ட்ரம்ப் அவர்களுடன் நட்புறவு மிக்க உரையாடலிலும் ஈடுபட்டார்.