லோகா படம் 13 நாட்களில் 202 கோடி வசூல்
கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் லோகா இந்தியா அளவில் வசூலை அள்ளுகிறது
30 கோடி பட்ஜெட்டில் உருவான லோகா, 300 கோடியை நோக்கி வேகமாய்
மலையாள திரையுலகில் வெளிவந்த லோகா திரைப்படம் தற்போது இந்திய அளவில் வசூலை அள்ளிக் குவித்து வருகிறது. 13 நாட்கள் ஆன நிலையில், இப்படம் ரூ.202 கோடி வரையிலான வசூலை எட்டியுள்ளது.
கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் நஸ்லன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த திரைப்படம், ஃபேண்டஸி – அட்வென்ச்சர் – சூப்பர்ஹீரோ வகை கதைமாந்திரத்தில் உருவாகி ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
13 நாட்களில் 202 கோடி வசூல்
குறிப்பாக, கல்யாணி பிரியதர்ஷன் “சந்திரா” எனும் அமானுஷ்ய சக்தி கொண்ட பெண் கதாபாத்திரத்தில் வெளிப்படுத்திய நடிப்பு அதிக பாராட்டுகளை பெற்றுள்ளது.
இயக்குனர் டொமினிக் அருண், வித்தியாசமான திரைக்கதை மற்றும் காட்சியமைப்பால் புதிய அனுபவத்தை வழங்கியுள்ளார். இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜோய் வழங்கிய பின்னணி இசை படத்தின் காட்சிகளை மேலும் வலுப்படுத்தி ரசிகர்களை ஈர்க்கிறது.
மலையாளத்தில் வெளியான லோகா, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளிலும் திரையிடப்பட்டு, வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் படம் பான்-இந்தியா வெற்றிப் படமாக திகழ்கிறது.
துல்கர் சல்மான் தயாரித்த இந்தப் படத்தின் சிறப்பு என்னவெனில், சுமார் ரூ.30 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் தற்போது ஏற்கனவே 202 கோடி வசூலை கடந்துள்ளது.
தொடர்ந்து நல்ல வரவேற்பு நிலைத்திருந்தால், படத்தின் மொத்த வசூல் விரைவில் ரூ.300 கோடியைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லோகா திரைப்படம், மலையாள சினிமாவை புது உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|