Home>உலகம்>மாட்ரிடில் எரிவாயு க...
உலகம்

மாட்ரிடில் எரிவாயு கசிவு வெடிப்பு: 25 பேர் படுகாயம்

byKirthiga|about 2 months ago
மாட்ரிடில் எரிவாயு கசிவு வெடிப்பு: 25 பேர் படுகாயம்

கட்டிட வெடிப்பால் கஃபே, கடைகள் சேதம் – தீயணைப்பு துறை விசாரணை

ஸ்பெயின் மாட்ரிட் நகரில் ஏற்பட்ட வெடிப்பில் ஒருவர் மரணம் – காரணம் எரிவாயு கசிவு என சந்தேகம்

மாட்ரிட் நகரில் உள்ள ஒரு கட்டிடத்தில் எரிவாயு கசிவால் ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படும் வெடிப்பில் ஒருவர் உயிரிழந்ததுடன், 25 பேர் காயமடைந்துள்ளனர் என்று அவசர சேவை பிரிவு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

சனிக்கிழமை நடைபெற்ற மீட்பு நடவடிக்கையில், நாய்களின் உதவியுடன் தேடுதல் மேற்கொண்டபோது மீட்புக் குழுவினர் ஒரு ஆணின் உடலை கண்டுபிடித்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஸ்பெயின் செய்தி நிறுவனம் EFE தெரிவித்ததாவது, தீயணைப்பு துறை அதிகாரிகள் இந்த வெடிப்பு எரிவாயு கசிவால் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக தெரிவித்துள்ளனர். எனினும், இதுகுறித்த காரணத்தை போலீசார் இன்னும் விசாரித்து வருகின்றனர்.

Selected image


தீயணைப்பு துறைத் தலைவர் ஹாவியர் ரோமேரோ கூறியதாவது, சனிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் மூன்று மாடிக் கட்டிடத்தின் தரைத்தளத்தில் ஏற்பட்ட வெடிப்புக்குப் பிறகு இடிபாடுகளில் சிக்கிய நால்வரை தீயணைப்பு வீரர்கள் மீட்டதாக தெரிவித்தார்.

மேலும், இந்த வெடிப்பில் அருகிலிருந்த கஃபே, கடை மற்றும் பல சொத்துகள் சேதமடைந்தன என்றும் அவர் கூறினார்.