மகாலட்சுமி ராஜயோகம் – கோடியில் புரளப்போகும் 4 ராசிகள்
செல்வம், முன்னேற்றம், மகிழ்ச்சி – துர்க்கை அருளால் கிடைக்கும் நன்மைகள்
மகாலட்சுமி ராஜயோகம் - பணத்தை அள்ளப்போகும் ராசிக்காரர்கள்
செப்டம்பர் மாதம் நவராத்திரி காலத்தில் அற்புதமான ஒரு யோகம் உருவாக இருக்கிறது.
செப்டம்பர் 24ஆம் திகதி, சந்திரன் துலாம் ராசிக்கு நகர்வதோடு அங்கு ஏற்கனவே உள்ள செவ்வாயுடன் இணைகிறார்.
வேத ஜோதிடத்தின்படி இந்த சேர்க்கை “மகாலட்சுமி ராஜயோகம்” எனப்படும் சுப யோகம் உருவாக வழிவகுக்கும். இந்த ராஜயோகம், குறிப்பாக நான்கு ராசிக்காரர்களுக்கு மிகுந்த அதிர்ஷ்டத்தையும் முன்னேற்றத்தையும் அளிக்கப் போவதாகக் கூறப்படுகிறது.
ரிஷபம்:
இந்த காலத்தில் ரிஷப ராசிக்காரர்களின் தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கையில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். நீண்ட நாள் காத்திருந்த பணிகள் நிறைவேறி, குடும்பத்திலிருந்து நற்செய்தி கிடைக்கும். வேலை வாய்ப்புகள், சம்பள உயர்வு மற்றும் சொந்த வீடு–வாகன கனவுகள் நனவாகும் வாய்ப்பு அதிகம்.
துலாம்:
துலாம் ராசியில் இந்த யோகம் உருவாகுவதால், நிதி நிலை உறுதியடையும். வணிகம் மற்றும் தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். அரசியல் மற்றும் அதிகார வட்டாரத்தில் நல்ல உறவுகள் உருவாகும். மரியாதை, புகழ், மகிழ்ச்சி ஆகியவை அதிகரிக்கும். தம்பதிய உறவிலும் நல்ல ஒற்றுமை ஏற்படும்.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு கர்ம பாவத்தில் இந்த யோகம் உருவாக இருப்பதால், தொழில் வளர்ச்சி உறுதி. வியாபாரத்தில் போட்டியாளர்களை முறியடித்து முன்னேற்றம் காண்பீர்கள். முதலீடு செய்யும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். குடும்ப ஒற்றுமை ஏற்பட்டு, பெற்றோரின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். சொத்து சம்பந்தமான வாய்ப்புகளும் கிடைக்கலாம்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு ஒன்பதாம் பாவத்தில் மகாலட்சுமி ராஜயோகம் ஏற்படுவதால், அதிர்ஷ்டம் முழுமையாக கூடியிருக்கும். வெளிநாட்டு கல்வி அல்லது பயண வாய்ப்புகள் கிடைக்கலாம். குடும்பத்துடன் மத யாத்திரைக்கு செல்ல வாய்ப்பு. வேலைப்பளுவில் இருக்கும் சிரமங்கள் குறைந்து, மேலதிகாரிகள்–சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|