இந்திய நிதியுதவியுடன் மலையகத்தில் 10,000 வீடுகள்!
இந்திய நிதியுதவியுடன் 10,000 வீடுகள் – இலங்கை திட்டத்தில் முன்னேற்றம்
மலையகத் தொழிலாளர் குடும்பங்களுக்கு நிரந்தர வீட்டு உரிமை நோக்கில் பெரும் முன்னேற்றம்
இலங்கையின் மலையகத் தொழிலாளர் சமூகத்திற்காக இந்திய அரசின் நிதி உதவியுடன் முன்னெடுக்கப்பட்ட “மலையக மகிழ்ச்சி வீட்டு உரிமை” (Malaiyaga Maghizhchi House Ownership) திட்டம் சிறப்பாக முன்னேறி வருகிறது.
“A Thriving Nation, A Beautiful Life” என்ற இலங்கையின் தேசிய முயற்சியின் ஒரு பகுதியாக, இந்திய பிரதமர் 2017 ஆம் ஆண்டு அறிவித்த இந்த முக்கியமான திட்டம், இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி தமிழர் குடும்பங்களுக்கு 10,000 வீடுகள் வழங்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது.
இந்த திட்டத்தின் கீழ் 4,700 வீடுகள் தோட்டத் தொழிலாளர்களுக்காக கட்டப்பட்டு வருகின்றன. இதில் குறிப்பாக மலையகப் பகுதிகளில் வசிக்கும் பேரழிவுக்குட்பட்ட பகுதிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
திட்டம் முழுமையாக இந்திய அரசின் நிதியுதவியுடனும் இலங்கை அரசின் ஒத்துழைப்புடனும் முன்னெடுக்கப்படுகிறது.
2020 முதல் 2024 வரை இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் 1,419 தோட்ட உள்கட்டமைப்பு வீடுகள் மற்றும் 1,822 இந்திய மானிய வீடுகள் (மொத்தம் சுமார் 3,241 வீடுகள்) கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
மேலும், இதன் கீழ் பல்வேறு உள்கட்டமைப்பு பணிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன:
மொத்த கூரை அமைப்புகள்: 42
சாலைகள்: 322
சுகாதார வசதிகள்: 290
குழந்தைகள் மேம்பாட்டு மையங்கள் (CDC): 20
பொது வசதிகள்: 355
ஆண்டு வாரியாகப் பார்க்கும்போது, 2020 முதல் 2024 வரை சாலை, சுகாதாரம், குழந்தைகள் மையங்கள், கூரை அமைப்புகள், பொது வசதிகள் ஆகியவை தொடர்ந்து மேம்படுத்தப்பட்டுள்ளன.
திட்டத்தின் நோக்கம் தோட்டத் தொழிலாளர்கள் தங்களுக்கென ஒரு நிலப்பகுதி (10 perch plot) பெற்று, அதில் வீடுகளை நிர்மாணித்து, நிரந்தர வீட்டு உரிமையாளர்களாக ஆவதை உறுதிப்படுத்துவதாகும். இதன் மூலம் தொழிலாளர் குடும்பங்கள் சமூக, பொருளாதார ரீதியாக வலுவடைந்து, பாதுகாப்பான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை அனுபவிக்க வழிவகுக்கிறது.
இந்த திட்டம் இலங்கையின் தோட்டத் தொழிலாளர் சமூகத்திற்கான இந்தியாவின் நீண்டநாள் நம்பகமான ஒத்துழைப்பின் ஒரு சிறப்பான அடையாளமாகவும், இரு நாடுகளுக்கிடையேயான நட்புறவின் சின்னமாகவும் இது விளங்கிறமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|