மாதம்பட்டி ரங்கராஜ் விவகாரம்; மனைவி ஸ்ருதி தந்த பதில்!
கணவருக்காக இறுதி வரை நிற்பேன் – மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி ஸ்ருதி உறுதி!
ஜாய் கிறிஸ்சில்டா – ரங்கராஜ் பிரச்சினை மீதான ஸ்ருதியின் வாக்குமூலம் சமூக வலைதளங்களில் வைரல்!
பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிறிஸ்சில்டா இடையேயான சர்ச்சை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.
திருமணம் மற்றும் குழந்தை தொடர்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஜாய் கிறிஸ்சில்டா போலீசிலும் மகளிர் ஆணையத்திலும் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து மகளிர் ஆணையம் இருவரையும் நேரில் அழைத்து விசாரணை நடத்தியது.
இந்தச் சம்பவத்துக்கிடையில், ஜாய் கிறிஸ்சில்டா ஒரு ஆண் குழந்தைக்கு தாயானார். குழந்தையின் பிறப்பு சான்றிதழில் தந்தை பெயராக மாதம்பட்டி ரங்கராஜ் குறிப்பிடப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
மேலும், மகளிர் ஆணைய விசாரணையில் ரங்கராஜ் தன்னை திருமணம் செய்துகொண்டதாகவும், குழந்தை தன்னுடையது தான் எனவும் ஒப்புக்கொண்டதாக ஜாய் கிறிஸ்சில்டா கூறினார்.
ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த மாதம்பட்டி ரங்கராஜ், “ஜாய் கிறிஸ்சில்டா என்னை மிரட்டிப் பேசி திருமணம் செய்துகொண்டதாக கூறுகிறார். குழந்தை எனது தாயாராக இருந்தால் டிஎன்ஏ சோதனையில் நிரூபிக்கப்பட்ட பின் அந்தக் குழந்தையை வாழ்நாள் முழுவதும் கவனித்துக்கொள்வேன்” என்று தெரிவித்தார்.
இந்நிலையில், இந்த வழக்கில் இன்னும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி, விசாரணையை CBCID பிரிவிற்கு மாற்ற கோரி ஜாய் கிறிஸ்சில்டா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அதற்கான பதிலை அளிக்க போலீசுக்கு நவம்பர் 12 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த சர்ச்சை குறித்து ரங்கராஜின் மனைவி ஸ்ருதி முதல்முறையாக பதிலளித்துள்ளார். “என் கணவர் மாதம்பட்டி ரங்கராஜ் ஒரு நல்ல மனிதர். அவரிடமிருந்து பணம் பறிப்பதே ஜாய் கிறிஸ்சில்டாவின் நோக்கம். எங்களை பிரிக்கவே அவர் முயற்சி செய்கிறார். எந்த குற்றச்சாட்டிலும் நான் என் கணவருடன் இறுதி வரை இருப்பேன். என் குடும்ப வாழ்க்கையை யாராலும் சிதைக்க முடியாது” என்று அவர் உறுதியாக கூறியுள்ளார்.
ஸ்ருதியின் இந்த வாக்குமூலம் சமூக வலைதளங்களில் பெரும் கவனம் பெற்றுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|