Mobile Spy Alert: உங்கள் தனிப்பட்ட தகவல்கள் கசிகிறதா?
உங்கள் போன் யாரோ கேட்கிறார்களா? தெரிந்துகொள்ள 7 எச்சரிக்கை சிக்னல்கள்!
உங்கள் மொபைல் Tap செய்யப்பட்டதா? கண்டுபிடிக்க 7 முக்கிய அறிகுறிகள்!
இன்றைய டிஜிட்டல் உலகில் ஸ்மார்ட்போன் நம் வாழ்வின் அங்கமாக மாறிவிட்டது. ஆனால், இதே ஸ்மார்ட்போனே நம் தனியுரிமைக்கு ஆபத்தாக மாறக்கூடும். மொபைல் tap (spy) செய்யப்பட்டால், உங்கள் தகவல்கள் அனைத்தும் மூன்றாம் நபருக்கு செல்லும் அபாயம் உள்ளது.
அப்படியானால், உங்கள் மொபைல் tap செய்யப்பட்டுள்ளதா என்பதை எப்படி கண்டுபிடிப்பது? இதோ 7 முக்கிய அறிகுறிகள்:
1. பேட்டரி Drain ஆகுதல் அல்லது அதிக சூடு
வழக்கத்திற்கு மாறாக உங்கள் மொபைல் அதிகமாக சார்ஜ் குறையவோ, பயன்படுத்தாமல் இருந்தும் சூடாகவோ இருந்தால், அது malware இயங்குவதை சுட்டிக்காட்டும்.
2. ஃபோன்கால் பேச்சில் சத்தம்
கால் செய்யும் போது ஹை பிட்சில் சத்தம் அல்லது click சத்தம் கேட்கப்பட்டால், அது unauthorized recording அல்லது call forwarding சிக்னலாக இருக்கலாம்.
3. Switch Off/Restart பிரச்சனை
மொபைலை switch off செய்ய முடியாத நிலை, அல்லது அடிக்கடி தானாக restart ஆகுவது, tap செய்யப்பட்டிருக்க வாய்ப்பு அதிகம்.
4. வெப் பேஜ் மாற்றம்
நீங்கள் அடிக்கடி பார்ப்பதான இணைய பக்கங்கள் மாற்றப்பட்டு போலியான (fake) பக்கங்கள் திறக்கப்படுகிறதா? அது spyware இருப்பதற்கான அறிகுறி.
5. மர்மமான மெசேஜுகள் & Calls
அடிக்கடி loan, donation போன்ற spam calls, SMS வந்தால், உங்கள் நம்பர் leak ஆகியிருக்கலாம்.
6. கேமரா & மைக்ரோஃபோன் தானாக ஆன் ஆகுதல்
உங்கள் அனுமதியில்லாமல் கேமரா/மைக்ரோஃபோன் இயங்கினால், spyware installed இருக்கலாம்.
7. அதிகமான Data Usage
உங்கள் mobile data usage திடீரென அதிகமாக இருந்தால், அது background-ல் data leak ஆகிறது என்பதற்கான warning.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|