பணம் சம்பாதிக்கிறோம்! ஆனால் சேமிக்க மறக்கிறோமா?
வயது அடிப்படையில் தவிர்க்க வேண்டிய நிதி தவறுகள்
பணம் சம்பாதிப்பது ஒரு திறமை என்றால், அதை கையாளுவது ஒரு கலையாகும். பணம் சம்பாதிப்பவர்கள் எல்லாம் பணக்காரர்கள் ஆகிவிடமுடியாது…
இந்தக் கலையை பலரும் வயதின் அனுபவத்துடன் தான் கற்றுக்கொள்கிறார்கள். ஆனாலும், சில தவறுகள் எந்த வயதிலிருந்தாலும் திரும்ப திரும்ப நடக்கும்.
இவை வயதுக்கு ஏற்ப மாறினாலும், இதனால் வரும் எதிர்வினைகள் ஒரே மாதிரியாகக் கடுமையானவையாக தான் இருக்கும். இளமையின் போது நிதி மேலாண்மை பற்றி யாரும் பேசுவதில்லை. சம்பளம் வந்தவுடன் செலவழிக்கப்படுவது சாதாரணமான விடயமாக போய்விட்டது.
"இப்போ enjoy பண்ணலாம், later பார்த்துக்கலாம்" என்ற எண்ணம் தற்காலிக சந்தோஷத்தைத் தரலாம், ஆனால் எதிர்காலம் அதற்கான பிரதிபலிப்பை காட்டும்.
சேமிப்பு, முதலீடு, மற்றும் கடன் கட்டுப்பாடு இவை எல்லாம் முக்கியம் என்பதை புரிந்துகொள்ளும் முன்பே, தவறுகள் நடந்திருக்க வாய்ப்பு அதிகம்.
வாழ்க்கையின் நடுத்தர கட்டத்தில் நிதி தவறுகள் ஒரு family-level domino effect ஆக மாறும்.
நிதிப் பழக்கத்தை தீர்மானிக்கும் வயது
குழந்தைகளின் கல்வி, வீட்டு கடன், மருத்துவச் செலவுகள் இவை அனைத்தும் ஒரே நேரத்தில் எதிர் பார்க்கும் போது, திட்டமிடல் இல்லாமல் இயங்குவது தற்காலத்தில் ஆபத்தான ஒன்றாக உருவெடுக்ககூடியது.
அதிகம் சம்பாதிக்கிறோம் என்று நினைத்தாலும், தவறான முதலீடுகள், தவிர்க்கப்படும் காப்பீடுகள் மற்றும் பெரும்பாலும் திட்டமிடாத செலவுகள் தான் வாடிக்கையாக இருக்கின்றன.
சிலர் வேகமான இலாபம் தரும் வாய்ப்புகளுக்காக அனைத்து சேமிப்பையும் செலவளித்து விடுகிறார்கள்.
சிலர் பிள்ளைகளின் கடனுக்கு நிதி ஆதரவு அளித்து, தாங்களுடைய ஓய்வுக்கால சேமிப்பையே இழந்து விடுகிறார்கள்.
அதுமட்டுமின்றி மருத்துவ செலவுகள் திடீரென புயலைப் போல தாக்கும். ஆனால் இந்த கட்டத்தில் நிதி தவறு செய்வது, திரும்ப திருந்தக்கூடிய ஒன்று அல்ல. வயது என்பது ஒரு எண் மட்டுமல்ல.
அது நம்முடைய நிதி பழக்கங்களையும் வகுத்துத் தீர்மானிக்கிறது. ஒவ்வொரு கட்டத்திலும் நாம் செய்யும் நிதி தொடர்பிலான முடிவுகள், நம்முடைய வாழ்க்கையின் தரத்தையும் அமைதியையும் தீர்மானிக்கின்றன.
ஆனால் அந்தத் தவறுகளை உணர்ந்து, காலத்துக்கேற்ற மாற்றங்களை மேற்கொள்வதற்கே வாழ்க்கையின் புத்திசாலித்தனம் ஒளிந்திருக்கிறது.
இளமை பருவ முடிவுகள் நீண்டகால தாக்கங்கள் ஏற்படுத்தும்
விதிகளை மீறிச் செலவழிக்கும் பழக்கம் இளமையில் மிகவும் பொதுவானது. வேலைக்கு செல்வதற்குப் பிறகு, தானாக வந்துவிடும் சுதந்திரம், சுரண்டலாக மாறும் வாய்ப்பு உள்ளது.
பணம் வரும் வழி தெரியாததால், சேமிப்பு குறித்து பெரும்பாலும் கவனமில்லை. "இப்போதுதான் வாழ வேண்டும்" என்ற எண்ணம், கடன் அட்டை அதிகம் பயன்படுத்த வைக்கின்றது மற்றும் தேவையில்லாத கடன்களையும் ஏற்படுத்துகிறது.
இதில் தவிர்க்க வேண்டிய தவறுகள் உள்ளன.
மாத வருவாயை விட அதிகம் செலவழித்தலை கட்டுப்படுத்த வேண்டும்.
அவசர நிலைக்கு நிதி ஏற்பாடு இல்லாமை
முதலீடுகளின் பின் தெரிந்து கொள்ளாமல் நம்புதல்
கடன் அட்டைகளின் தவறான பயன்பாடு
இதற்கான தீர்வுகளாக,
செலவுகளை கணக்கோடு வைத்தல்
மாத வருமானத்தின் ஒரு பகுதியைத் தானாகவே சேமிக்க வழி அமைத்தல்
நிதி ஆலோசகர் உதவியுடன் முதலீடு செய்தல்
நடுத்தர வயது – பொறுப்புகள் அதிகம், கவனமும் அவசியம்
இந்த காலக்கட்டத்தில் குடும்ப வாழ்க்கை ஆரம்பம், குழந்தைகள் கல்வி, வீட்டுவசதி, ஓய்வூதியம் என பல நிதிச் சுமைகள் ஏற்படுகின்றன.
குறைந்த வட்டி விகிதங்களுக்காக அதிக ஆபத்தான முதலீடுகளை தேர்வு செய்வது தவறு. இதைத் தவிர, காப்பீடுகளின் தேவையை அலகில் எடுத்துக்கொள்ளாமல் இருப்பது எதிர்பாராத செலவுகளுக்கு வழிவகுக்கக்கூடும்.
பலரும் எதிர்காலக் கட்டுப்பாடுகளைப் புரிந்துகொள்ளாமல், தற்போதைய வசதிக்கே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
ஆனால் வாழ்க்கை நிலைத்தன்மையை வலுவூட்ட, இப்போதே திட்டமிடுதல் அவசியம்.
இதில் தவிர்க்கப்பட வேண்டியவை,
ஒரு பாதுகாப்பான நிதித் திட்டம் இல்லாமை
குழந்தைகள் கல்விக்கான சேமிப்பில் தாமதம்
எல்லா முதலீடுகளையும் ஒரே வகையில் வைத்தல்
ஓய்வு திட்டம் தொடங்கத் தயக்கம்
இதற்கான தீர்வுகளாக,
நிதி இலக்குகளைத் தெளிவாகக் குறிக்கப்படுதல்
பலவகையான முதலீடுகள் மூலம் ஆபத்தை சமன்செய்தல்
காப்பீடு மற்றும் வருமான பாதுகாப்புக்கான திட்டங்களைத் துவக்குதல்
வயதுக்கேற்ப தவிர்க்க வேண்டிய நிதி பிழைகள் பற்றிய விழிப்புணர்வை வளர்த்துக்கொள்வது என்பது, ஒவ்வொருவரும் நிலைத்தமான வாழ்க்கையை உருவாக்கும் முதல் படியாகும்.
பணம் என்பது ஒரு கருவி. அதனை சரியாகப் பயன்படுத்தத் தெரிந்தால், அது சுதந்திரம், பாதுகாப்பு, மன நிம்மதி ஆகியவற்றைத் தரும். ஆனால் தவறான நிதி முடிவுகள், ஒரு குடும்பத்தின் முழுக் கட்டமைப்பையும் சீர்குலைக்கக்கூடும்.