நாகப்பட்டினம்–காங்கேசன்துறை படகு சேவை நிறுத்தம்
வடகிழக்கு மழைக்காலம் காரணமாக சர்வதேச gடகு சேவை டிசம்பர் வரை நிறுத்தம்
வடகிழக்கு மழையால் நாகப்பட்டினம்–காங்கேசன்துறை படகு சேவை நிறுத்தம்
வடகிழக்கு மழைக்காலம் தொடங்கியதைத் தொடர்ந்து இந்தியா நாகப்பட்டினம் – இலங்கை காங்கேசன்துறை இடையிலான சர்வதேச படகு சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த சேவை டிசம்பர் மாதத்தில் மீண்டும் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுபம் பேரி நிறுவனம் அக்டோபர் 26 முதல் 28 வரை திட்டமிடப்பட்டிருந்த அனைத்து பயணங்களும் ரத்து செய்யப்பட்டதாக அறிவித்துள்ளது. இதற்குக் காரணமாக கடுமையான வானிலை முன்னறிவிப்பு குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிறுவனம் அக்டோபர் 28 வரை சேவைகளை தொடர திட்டமிட்டிருந்தது. ஆனால் நவம்பர் முதல் ஆண்டு பராமரிப்பு பணிகளுக்காக சேவைகளை நிறுத்துவது வழக்கமாகும்.
சுபம் பேரி நிறுவனத் தலைவர் சுந்தர்ராஜ் பொன்னுசாமி, “இந்த இடைவேளையை பயன்படுத்தி கப்பலை புதுச்சேரியில் ‘ட்ரை டாக்’ செய்து, வழக்கமான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். மேலும், பயணிகளின் இருக்கை எண்ணிக்கையை 150 இலிருந்து 186 ஆக உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என Times of India-க்கு தெரிவித்துள்ளார்.